34. அருள் நித்யுவாணி

1.2K 139 23
                                    

34: அருள் நித்தியுவாணி:

தன் தாய் கதறுவதை பார்க்க இயலாத ஜீவா அவரின் கரம் பற்றி, "உங்களுக்கு மகனா... என் அண்ணன்களுக்கு தம்பியா.. அவர்களை காப்பாற்ற ஏதாவது வழி இருக்கான்னு நான் கண்டுபிடிக்க முயற்சி பண்றேன். அதுவும் நேர்மையான வழில தான்ம்மா உங்களுக்காக . ஆனால்..." என்று ஜீவா நிறுத்தியதும் அவனை ஏறிட்டு பார்த்தார் அறிவழகி.

ஜீவா மீண்டும் தொடர்ந்தான்.

"ஆனால் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியா நான் என்னோட கடமையை செஞ்சுதான் ஆகணும். தயவுசெஞ்சு அதுக்கு குறுக்க நிக்காதீங்க ப்ளீஸ். நீங்க விஜய்க்கு மட்டும் அம்மா இல்லை. எனக்கும் தான் அம்மா. தயவு செஞ்சு பாரபட்சம் காட்டாதீங்க"
என்று கூறியதும் தன் கண்களைத் துடைத்த அறிவழகி திரும்பி விஜயை ஒரு பார்வை பார்த்தவர் அழுதுகொண்டே அவ்விடம் விட்டுச் சென்றார்.

எப்.ஐ.ஆர் பதிவு செய்து மறுநாள்  கோர்ட்டுக்கு அழைத்து செல்வதற்கான அனைத்து வேலைகளும் நடந்தேறின.

மறுநாள் காலை...

லாக்கபிற்க்குல் கல் பெஞ்சில் அமர்ந்து கண்களை மூடியபடி இருந்தனர் இரட்டை சகோதரர்கள். 

லாக்கப்பை  திறந்து கொண்டு யாரோ உள்ளே வரும் சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்க்க உள்ளே நுழைந்தான் ஜீவா.

உள்ளே வந்தவன் இருவரின் முன்னால் வந்து நிற்க, அவனை என்ன என்பது போல இருவரும் ஏறிட்டு பார்த்தனர்.

ஜீவா , "உங்க ரெண்டு பேரையும் பார்க்க எனக்கு பொறாமையா இருக்கு. உங்களுக்காக உங்க மேல உயிரையே வச்சிருக்கவங்க எத்தனை பேர் இருக்காங்க. சின்ன வயசுல இருந்து என் மேல பாசம் வைக்க ஒருத்தவங்க இருக்க மாட்டாங்களான்னு எவ்வளவு ஏங்கி இருக்கேன் தெரியுமா?"

துருவை கைகாட்டி "உனக்கு  உயிரை விட அதிகமாக நேசிக்கும் மனைவி பாசம் காட்ட தாத்தா கிருஷ்ண பூபதி."

  விஜய்யை கைகாட்டி "உனக்கு  அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்த அம்மா. உயிருக்குயிரான காதலி."

மனம் வருடும் ஓவியமே!Donde viven las historias. Descúbrelo ahora