30. தமிழ்வெண்பா:
இருவரும், "என்னது உன் கஸ்டடியா?" என்று கோரஸாக கேட்டு பின் துருவ், "யோவ்! நீதான் எங்க மூணு பேரு கஸ்டடில இருக்க" என்றான்.
விஜய் ஓட்டுனரின் முகத்தை கொஞ்சம் திருப்பி பின் பக்கம் காட்ட, அவனை கண்ட ராஜேந்திரனுக்கு உண்மையான நெஞ்சுவலியே வந்துவிடும் போல இருந்தது.
"நீ... நீ... நீ எப்படி இவங்க கூட...?" என்ற ராஜசேகரின் உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அங்கே இருந்தது சுகந்தே தான்...
"என்ன ராஜு பேபி இதுக்கே சாக்கான எப்படி? கொஞ்சம் நமக்கு முன்னாடியும் பின்னாடியும் பாருங்க..." என அவன் கூறிட படபடக்கும் இதயத்தோடு முன்னும் பின்னும் நோக்கினார். துரூவும் தன் பக்கமிருந்த கண்ணாடியை இறக்க அந்த பக்கத்திலிருந்து கையாட்டிக் கொண்டிருந்தான் ஒருவன்.
"இவங்க எல்லாம் என் ஆளுங்க... நான் தானே உங்கள கொல்ல ஏற்பாடு பண்ணேன்..." என்றார் ராஜேந்திரன் இன்னும் முழுமையாக நீங்காத குழப்பத்துடன்.
"அப்போ உன் ஆளுங்க... இப்போ எங்க ஆளுங்க..." என்றான் சுகந்த் காரின் வேகத்தைக் கூட்டியபடியே.
அவரால் இதை நம்பவே முடியவில்லை. 'இவன் எப்படி இவர்களுடன்? இதையறியாது தன்னுடைய அத்தனை திட்டத்தையும் முட்டாள் தனமாக அவனிடம் ஒப்பித்திருந்தேனே?' என உள்ளத்தில் வன்மம் ஏற குமைந்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்.
லீனாவின் மூலம் தான் சுகந்தின் அறிமுகமே கிட்டியது ராஜேந்திரனுக்கு. லீனா, சுகந்த், துரூவ் மூவருமே முதுகலை ஒன்றாய் பயின்றவர்கள்.
தாய்மொழி மட்டுமே போதுமான காரணமாக இருக்க கண்டதும் துரூவ், சுகந்த் இருவருக்குமிடையே அழகான நட்பு மலர்ந்து விட்டது.
முதலில் லீனாவின் காதலை தெரிந்துக் கொண்டு சுகந்த் கூட அதற்கு ஆதரவாகவே பேசினான். ஆனால் துரூவ் ஆதுவின் மீது கொண்ட காதல் தெரிந்தபின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான். அதன் பிறகே இருவரும் சேர்ந்து ஆது வேலை செய்யும் கம்பெனியை வாங்கியது.
CZYTASZ
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...