9. அன்பின் ஷிஜோ

2K 189 61
                                    

9. அன்பின் ஷிஜோ:

வயிற்றில் பிள்ளையை சுமக்கும் பெண்ணிடம் இருக்கும் பொலிவை போன்று பார்ட்டிக்கு சென்றவன், அங்கு ஏற்பட்ட அவமானத்தால், முகம் வாடியபடி வீட்டிற்குள் நுழைந்தான் விஜய்.

"ஏங்க, எந்திருச்சு வாங்க சாப்ட..." ராஜேந்திரனிடம், விஜய்யின் அம்மா கெஞ்சிக்கொண்டிருந்த குரல் கேட்டது.

விஜய், தன் வாடிய முகத்தை, தட்டில் சாதம் வைத்துக்கொண்டிருந்த தன் அம்மாவுக்கு காட்டாமல், தனதறையை நோக்கி நடந்தவறே "எனக்குசேத்து சாப்பாடெடுத்து வைமா" என்றான்.

"ஏன்டா, பார்ட்டிக்குதான போன அங்க சாப்டலயா?" அம்மாவின் கேள்வியில் கரிசனை இருந்தது.

அன்னையின் கரிசனையை நிராகரித்தாவறே தனதறைகுள் நுழைந்து கதவை தாழிட்டு, நிலைக்கண்ணாடி முன் நிற்க, அவன் முகம் முழுவதும் அவமானவேர்கள் கிளைகிளையாய் விரிந்திருந்தது. மனதுக்குள் அமிழ்ந்து போயிருந்த துருவ்வின் முகம் கண்ணாடியில் தெரியவும், "துருவ், நானோ, அம்மாவோ உனக்கும் உங்க அம்மாவுக்கும் எந்த துரோகமும் செஞ்சதில்ல. ஃபர்ஸ்ட், செய்யனும்னு நெனச்சதும் இல்ல. உனக்கு எங்க மேல எதுக்கு அவ்ளோ கோவம்?. தப்பு பண்ணது அப்பா. நாங்க என்ன செய்யமுடியும்." மனதில் இருந்ததுபடியே கண்ணாடியை பார்த்து கேட்க, விஜய்யின் சாயல் சிரித்தது. கோபத்தில் கண்ணாடியை உடைக்க, கைகளை ஓங்கினான்.

"சாப்ட வாடா, கதவ சாத்தீட்டு  என்னதாம்பண்றியோ... சீக்ரொ வா..." வெகு அருகில் அம்மாவின் குரல் கேட்டு ஓங்கிய கைகளை கீழிறக்க, "உங்கப்பாவும் நீயும் ஒரே மாதிரி இருக்கீங்க. உங்க ரெண்டுபேரயும் வெச்சுக்கிட்டு நா என்னதாம்பண்றதுனே தெர்ல..." என்று சொல்லும்போது அவர் குரல் தேய்திருந்தது.

சில சமயங்களில், தாழிட்ட கதவுக்கு பின்னால் இருந்து சாப்ட வாடா என்று கேட்கும் பழக்கப்பட்ட குரலுக்கு நாம் வாலாட்ட தவறுவதே இல்லை. விஜய்யும் அப்படித்தான்.

முகம் துடைத்தபடியே, உணவருந்த உக்கார்ந்த போது, "என்னப்பா பார்ட்டிக்கு போயிருந்த, அங்க ஏதும் சாப்டலயா?. அம்மா சொன்னா". அவ்வளவு அன்போடு கேட்கும் தந்தையிடம் கோபப்படுவது சரியானதல்ல என்றறிந்த விஜய், "இல்லப்பா, அங்க சாப்பாடு புடிக்கல. அதுவுமில்லாம எனக்கு அங்க சாப்ட இஷ்டமுமில்ல. அம்மா சமையல்தா பெஸ்ட்னு தோனுச்சு. அதா..."

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now