1. தர்ஷினிசிம்பா

5.4K 259 103
                                    

1. தர்ஷினிசிம்பா:

கணினியில் தான் டைப் செய்த ப்ரோக்ராமிற்கு நிறைய பிழைகள் வர, சாவகாசமாய் சம்மணமிட்டு நாற்காலியில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து அந்த பிழைகளை ரசித்து திருத்தி கொண்டிருந்தாள் ஆதர்ஷினி.

பேரழகி என்றெல்லாம் வர்ணிக்க முடியாது. ஆனால் பார்ப்பவர் கண்களுக்கு நம் பக்கத்து வீட்டு பெண் போல் அம்சமாய் தெரியும் ஒரு அழகு.

கணினி என்றாலே பயந்து ஒடுபவளை பிடித்து "பாப்பா இப்போ எல்லாம் இந்த கம்‌ப்யுட்டர் படிச்சா தான் நல்ல வரவேற்ப்பாம். அதனால அதை படிம்மா" என்றார் அவளின் அப்பா ஒரு நாள்.

"சரிப்பா" என்றாள் அப்பாவின் மகள்.

அன்றில் இருந்து அவளுக்கு பிடித்த படிப்பாயிற்று கணினி.

தந்தையின் ஒற்றை சொல்லில் அவளின் உயிரானது கணினி.

அதில் மேற்படிப்பு படித்து இன்று நல்ல சாப்ட்வேர் டெவலப்பிங்க் கம்பனியில் வேலை கிடைக்க, அதுவே மிகவும் பிடித்த வேலையாயிற்று.

பெரிய பெரிய கணினி நிறுவனத்தில் வேலை செய்ய ஆரம்பித்தால் பிள்ளைகளின் நடவடிக்கைகள் மாறுவதாக ஒரு சிலர் அவளின் பெற்றோரிடம் கூற அவளின் அப்பா, "இங்க பாருப்பா எல்லாம் நாம பிள்ளைங்களை வளர்க்கிற விதத்துல தான் இருக்கு. நான் என் பொண்ணை நல்லா வளர்த்திருக்கேன். என் பொண்ணு மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு" என்று கூற அன்றே மனதில் ஒரு உறுதியை மட்டும் கொண்டாள்.

எவ்வளவு உயரம் சென்றாலும் எல்லா விஷயங்களிலும் நம் கலாச்சாரத்தின் எல்லையை தாண்டுவதில்லை என்று.

அன்றில் இருந்து யார் நம் பண்பாட்டுக்கு பழக்கம் இல்லாத செயல்களில் ஈடுபட கூப்பிட்டாலும் முடியாது என்று மறுத்து விடுவாள். அதாவது "இன்னைக்கு சாய்ந்திரம் நம்ம கம்பனில ஒரு டிரிங்க்ஸ் பார்ட்டி இருக்குடி நீ வரல்ல?' என்று தோழி கேட்டாள்.

"இல்லடி எனக்கு அதெல்லாம் பிடிக்காது. முடிஞ்சா நீ போகாம இருந்துக்க " என்று சென்று விடுவாள்.

மனம் வருடும் ஓவியமே!Donde viven las historias. Descúbrelo ahora