27. வைஷு அய்யம்
தங்கள் வாழ்க்கையின் தொலைந்து போன சில பக்கங்கள் இப்போது திரும்பக் கிடைத்து விட்ட மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்த இரட்டைச் சகோதரிகள் சந்தோஷத்தில் அவரவர் இணையையும் தங்களுடைய மாமன் மகன் நவிந்தனையும், "மூணு பேரும் கொஞ்ச நேரத்துக்கு எங்க உசுர வாங்காம வேற
எங்கேயாவது ஓரமாப் போய் விளையாடுங்கடா!" என்ற பாவத்தில் கழட்டி விட்டு தனியாக சென்று அமர்ந்து கொண்டனர்.லட்சுமியும் முருகேசனும் தங்கள் வளர்ப்பு மகளின் பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
அனைவரும் கூடியிருந்தது மாதங்கியுடைய வீட்டில் தான்!
அன்று ஏதோ விளையாட்டாக தொலைக்காட்சியில் பாடலைப் பார்த்து நினைத்தது நிஜமான விஷயம் தான் என்று தெரிந்ததில் மாதங்கி ஆனந்தத்தில் குதித்துக் கொண்டிருந்தாள்.
"ஆதர்ஷினி உனக்கு வேர்க்குது பாரு...... ஏஸி கூலிங் ஜாஸ்தியா பண்ணட்டுமா? தாகமா இருந்தா நன்னாரி ஸர்பத் குடிக்கிறியா? கொறிக்க சிப்ஸ் மாதிரி ஏதாவது?" என்று கேட்டு ஆதுவின் பின்னாலேயே வால் போல் சுற்றிக் கொண்டிருந்த மாதங்கியை பார்த்து விஜய்யும், துருவ்வும் சிரித்துக் கொண்டனர்.
"ம்ஹூம் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மாது; நான் என்ன உன் வீட்டுக்கு வந்த கெஸ்டா..... இப்படி விழுந்து விழுந்து ஸர்வ் பண்ணிட்டு இருக்க? உன் பேர இன்னும் கொஞ்சம் கம்ப்ரெஸ் பண்ணிக்கலாமா? நீ என்னோட யங்ஙர் சிஸ்டர் தான? உன் கிட்ட உரிமை எடுத்துக்கலாம் தப்பில்ல, உன்னை நான் மதுன்னு கூப்பிடலாமா?" என்று கேட்ட தன் இரட்டைச் சகோதரியை தழுவிக் கொண்ட மாதங்கி.
"நான் உனக்கு மதுன்னா நீ எனக்கு தரு! அக்கான்னு எல்லாம் கூப்பிட மாட்டேன் பார்த்துக்க. இந்த துருவ், விஜய் பசங்க மாதிரி கட்டி உருண்டு சண்ட போடாம நாம எப்பவும் ரொம்ப ரொம்ப சமர்த்து ஸிஸ்டர்ஸா இருப்போம். ஓகேவா தரு?" என்று கேட்ட மாதங்கியிடம் சந்தோஷ மிகுதியில் ஹைஃபைவ் கொடுத்தாள் ஆதர்ஷினி.
YOU ARE READING
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...