40. ரைட்டர் எம்.எப்

1.2K 124 66
                                    

40. ரைட்டர் எம்.எப்:

துருவ் காதில் ஏதோ கூறவும் யோசனையுடன் கேட்க தொடங்கிய ஜீவாவின் முகம் அவன் கூறியதை கேட்டதும் நிலைமைக்கு எதிர்மாறாக பிரகாசமாக மின்ன அதே உற்சாகத்துடன் தன் சகோதர்களை கைது செய்தான்.

அவனது உற்சாகத்தை கண்ட அனைவரும் அவனை புரியாமலும் கோபமும் கலந்து பல பார்வைகளில் பார்க்க விஜய் மட்டும் கண்களில் அனல் பறக்க அவனை வெறித்தான்.

அடுத்த நிமிடம் தன் ஜீப்பில் இருவரையும் ஏற்றிக்கொண்டு ஜீவா அங்கிருந்து பறந்திருந்தான்.

"டேய் துருவ்ண்ணா.." விஜய் கொந்தளிக்க அதற்கு மாறாக ஒரு புன்சிரிப்போடு.

" என்னடா.." என்றான் துருவ்.

"இப்போ என்னடா என்னை விட்டுட்டு இரண்டு பேரும் பேசினீங்க?" விஜய் கோபமாய் கேட்க அதற்கு ஜீவாவோ, "என்னை இவ்ளோ சீரியஸ்லயும் நீ சிரிக்க வச்சிடுற அண்ணா.." என கூறி சிரிக்கவும் இன்னும் கோபமாய் "ஏய்.." என விஜய் குரல் கொடுத்தான்.

"இரு இரு சொல்றேன்." என அவனிடம் அவர்கள் பேசியதை துருவ் கூற விஜயோ, "ஹேய்! செம்ம. ஆனால், ஏதும் பிரச்சனை ஆகாதுல?" என்றான் அவன் சிந்தனையோடு.

"அதெல்லாம் ஆகாது." என்றான் பதிலுக்கு துருவ்.

சில தூரம் கடந்திருக்க அந்த ஆள் அரவமற்ற வீதியில் வந்து நின்றது ஜீப்.

இறங்கி துருவ் சுற்றி பார்க்க அங்கு அவனுக்காகவே காத்திருந்தான் நவீன் தன் காரில்.

ஜீவாவிடமும் விஜயிடமும் சொல்லிக்கொண்டு அந்த காரை நோக்கி விரைந்தான் துருவ். அவன் காரில் ஏறிக்கொண்டதும் ஓட்டுனர் இருக்கையில் இருந்த நவீன் தன் காரை பின்னிருந்து ஜீப்பின் வலது பக்கமாய் பாதையில் கொண்டு வந்து நிறுத்தினான்.

காரின் உள்ளே இடது பக்கமாய் இருந்த துருவ் வெற்றி நிச்சயம் என்ற பார்வையை ஜீப்பில் இருந்த ஜீவாவுடன் பரிமாறிக்கொள்ள அதை ஏற்றுக்கொண்டே பதிலுக்கு அதே சிரிப்பை முகத்தில் படற விட்ட ஜீவா இருவரையும் பார்த்து கையசைத்து விட்டு தன் கையிலிருந்த சுக்கானை ஒரு சுற்று சுற்றி விட, அது அந்த பாதையையும் அதன் இயக்கத்திற்கு ஏற்ப சக்கரங்களால் அளந்திட்டு தன் பயணத்தை எதிர்த்திசையில் ஆரம்பித்தது அந்த ஜீப்.

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now