28. வாசகிதுருவேந்திரன் அவளுக்கு முதுகுகாட்டிப் படுத்துவிட, அவனது வெற்றுமுதுகைப் பார்த்த படி, இந்தப்புறம் திரும்பிய ஆதர்ஷினி,
மெல்ல தலைமாட்டில் இருந்த மேஜை டிராயரைத்திறந்து அவன் கொடுத்த அந்த நோட்டைக் கையில் எடுத்தாள்...தடிமனான டைரி போன்றிருந்த அதை வருடியவளுக்கு அந்த மரவீடும் மழைநாளும் நினைவுக்கு வந்தது...
'
அவர்கள் ஐவரும் நின்று வட்டமாகக் கையை வைக்கும்போது, தனது வலக்கையில் கட்டியிருந்த வாட்சில் மணியைப் பார்த்த விஜய் திகைத்தான்..."ஐயோ... மணி நாலரை ஆகிருச்சு..."
"நாலரைதான? ஏழரை இல்லையே..." நவீந்தன் கவுன்டர் என்ற பெயரில் கொடூரமாகக் கடிக்க, மீதி இருந்த நால்வரும் அவனைக் கர்ணகொடூரமாக முறைத்தனர்...
அதைக் கண்டு அவன் திருதிருவென்று முழிப்பதைப் பார்த்த மாதங்கி முதலில் முறைப்பைக் கைவிட்டு கலகலவென்று நகைக்க ஆரம்பித்தாள்...
நவீனை முறைத்துக்கொண்டிருந்த விஜயின் விழிகளுக்கு அந்த சதங்கை இசையைக் கேட்ட செவிகள் கட்டளையிட,
அவனது விழிகள் அந்தக் கட்டளையை உடனே செயல்படுத்தின...அகன்ற அவளது விழிகள், சிரிப்பில் சுருங்கி பளபளக்க நகைத்தவளின் நகைப்பொலியைக் கேட்டவனுக்கு ஏனோ அவளுடன் இணைந்து சிரிக்க வேண்டும் எனத் தோன்ற, அவனது சிரிப்பொலியும் அவளது இசையில் கலந்து பிணைந்தது...
இருவரும் சிரிப்பதைப் பார்த்த நவீந்தனும் அசடுவழிந்தவாறு சிரிக்கத்தொடங்க துருவேந்திரனின் இதழ்களிலும் சிறுநகையொன்று படர்ந்தது...
ஓரக்கண்ணால் தன்னவளைப் பார்க்க, அவளது இதழ்களும் அவனது கண்களுக்கு ஓரவஞ்சனை செய்யாமல் அழகாக மலர்ந்திருந்தது...
ஓரக்கண்ணால் லேசாகப் பார்த்தவனது முழுக்கவனத்தையும் அந்த மென்னகை கவர்ந்திழுக்க, வடதுருவத்தைக் கண்ட தென்துருவக்காந்தமாய், அவனது பார்வை முழுவதுமாக அவள் புறம் திரும்பியது...
YOU ARE READING
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...