48. ஹஸ்ஸி இனியவள்:
❤ஹஸி இனியவள்❤
உறவினர்கள் எல்லோருமாய் கலைந்து சென்றிருக்க வீட்டினரும் நெருங்கிய நட்பு வட்டாரமுமே எஞ்சியிருந்தனர்.
ஐந்து கதிரைகளை வட்டமாய் வைத்து மணமக்களை சுற்றி நிற்க வைத்திருந்தனர். முதியவர்கள் நாகரீகமாய் ஒதுங்கிக் கொள்ள அந்த ஹால் மத்தியில் இளசுகளின் பேச்சும் சிரிப்பொலியும் காதைப் பிளந்தது.சுற்றிலும் இத்தனை களேபரம் நடக்க மாதங்கியுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த சுபாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுகந்த். அவ்வப்போது அவனைப் பார்ப்பதும் பார்வையைத் திருப்புவதுமாய் அவளிருக்க.
"என்னடா வாயால வாட்டர் பாலே ஊத்துது...? அதுக்குள்ள கரெக்ட் பண்ணிட்டியா?" என்று கேட்ட துருவ்விடம்..
"மாமா..." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்த சுகந்தை "அடிங்க... படவா ராஸ்கோல். ஏதோ கெஞ்சிக் கேட்டியேன்னு மாதங்கிக்கிட்டே நம்பர் வாங்கிக் கொடுத்தேன். அதுக்குன்னு மாமாவாக்கிட்டேயடா படுபாவி.." என்றான் துருவ்.
"சரி ரைட்டு விடு மச்சி... மச்சி ஓகேதானே? முந்தா நாள் மாதங்கிக் கூட பேசிட்டிருந்த சுபாவை பாத்தப்பவே முடிவு பண்ணிட்டேன்.. கட்டிக்கிட்டா இந்தப் பொண்ணை கட்டிக்கனும்னு.." என்றான் சுகந்த்.
" அதுக்கு நான் தானாடா கெடைச்சேன்..?" துருவ் அங்கலாய்க்க.
"நன்றி கெட்டவனே! நான் உனக்கு என்னல்லாமோ பண்ணிருக்கனேடா. கேவலம் ஒரு நம்பர் வாங்கி தந்துட்டு என்னா பில்டப்பை விடுற..?" பொங்கி எழுந்த சுகந்தை, "ஓகே! ஓகே! சமாதானம்.." என்று துருவ் அமைதிப்படுத்தினான்.மறு புறமோ சுகந்தின் பார்வையால் இனம் புரியா உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டிருந்தாள் சுபா.
எங்கு திரும்பினாலும் கையில் காமிராவுடனும் அவளை விழுங்கும்பார்வையுடனும் காட்சி தந்து கொண்டிருந்தான். இதயம் வேகமாய் அடித்துக் கொள்ள நேற்று நடந்த சம்பவம் இப்போது நடந்ததைப் போல கண் முன்னே விரிந்தது.
YOU ARE READING
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...