44. ஆயிஷ் அஹ்மத்:
ஜீவா சாரதியாய் பொறுப்பை ஏற்க அவன் கட்டளைக்கேற்று சக்கரங்கள் சூழல; "இந்த சக்கரங்களைப் போல் காலத்தை சுழற்றி மாற்ற ஏதும் இல்லையே!" என்ற கவலையின் விம்பங்களாய் அந்த மூன்று உடற்களும் தங்களது உயிரை தேடிய பயணத்தில் இலயித்திருக்க, "கடவுள் நல்லவங்கள சோதிப்பான். ஆனா, கைவிட மாட்டான்னு சொல்லுவாங்க இங்க என்னடானா, ஒன்னு முடிய இன்னொன்னு நடந்துகிட்டே இருக்கு. கடவுள் இருக்கார்னா! ஏண்ணா நம்மள நிம்மதியா வாழ விடமாட்டேங்குறார்?" என்று விஜய் தன் அண்ணனிடம் தான் விடைபெறும் என்ற புதிர்கள் விடையில்லா புதிர்களாகவே நீண்டு செல்லும் தன் வாழ்க்கை பற்றிய மனச்சுமையை இறக்க துருவேந்திரனோ அவன் உயிராக நினைத்த அவன் சரிபாதியின் கண்கள் கலங்கக்கூடாது, எது நடந்தாலும் என்னோட ஆதுவ இனியும் கண்கலங்க வைக்க கூடாது, இன்னைக்கி இதுக்கு ஒரு முடிவு கட்டனும் என உருக்கமாக தன் ஆதுமா வ காப்பாத்தியே தீருவேன் என்று கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருக்க தம்பியின் கேள்வியில் நிஜ உலகிற்கு திரும்ப, விஜய் கடவுள் கைவிட மாட்டார் விஜய் என்று தன் தம்பிக்கு நம்பிக்கையூட்டி தன்னையும் வலுப்படுத்திக்கொண்டான்.
தன் வலிகளை மறந்து மற்றவர் வலிகளிற்கு ஆறுதல்கூறுவது உடன்பிறந்தோரின் சிறப்பு போலும். சொந்தங்களை தேர்ந்தெடுக்க வாய்ப்புக்கள் இல்லை தான் என்றாலும் தன் உடன்பிறப்பென்ற இரத்த பந்தம் மனங்களை பிணைத்துவிடுகிறது. கீரியும் பாம்புமாய் அடித்துக்கொண்டாலும் பந்த பாசம் மாறாது என்பதற்கு துருவ், விஜய் ஓர் உதாரணம்.
நாமொன்று நினைக்க கடவுளொன்று நினைப்பான் என்ற பழமொழி சந்தர்ப்பம் அறியாது நினைவு வர ராஜேந்திரனிடம் இருந்து எப்படி தாங்கள் உறவுகளைக் காப்பாற்றுவது என்ற குழப்பத்தில் மூழ்கியிருக்கி மூவரும் முத்திக்காய் சிந்தனையில் ஆழ்ந்து பயணிக்க ஆரம்பித்தனர்.
.....
மங்கலான வெளிச்சத்தில் எல்லோரும் ஒரே அறையில் சிறைப்பட்டிருக்க என்ன நடந்தது என்று அறிவழகி நினைத்துப்பார்த்தார்.
சஞ்சனாவை மருத்துவமனையில் இருந்து அழைத்துக்கொண்டு வண்டியில் ஏறி துருவின் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.
ஆதுவும் மாதுவும் தன் கணவர்கள் நிரபராதியாக தீர்ப்பு வந்ததற்காக வேண்டுதல் வைத்துக்கொண்டு இனிமே, தன் கணவர்களுக்கு கஷ்டத்தை கொடுத்து விடாதே.. அதற்கு பதிலாய் எங்கள் உயிரை வேண்டுமானால் எடுத்துக்கொள் என்று வேண்டிய அவர்களிற்கு தெரியவில்லை அவர்களின் கணவர்களின் உயிர் அவர்கள் தான் என்று. இங்கே சஞ்சனா ராஜேந்திரனை கழுகாய் பிடிக்க துப்புக்களை அசை போட்டுக்கொண்டிருக்க, தன் மகனிற்காக தன்னுயிரை துச்சமாக மதித்த தன் மருமகள் சஞ்சனாவை பெருமிதத்தோடு தலை வருடிக்கொண்டே இனிமேலாவது அவங்க வாழ்க்கைய சந்தோசமா வெச்சிரு கடவுளே என்ற அறிவழகி மனமுருக வேண்டிக்கொண்டிருக்கையில், தாங்கள் செல்லும் வண்டி வேறுவழியில் பயணிப்பதை ஊகித்துக்கொண்டார். "ரைவர் ஏன்பா இந்த பக்கமா போற நம்ம வீடு அந்த பக்கம் தானே?" என்ற அறிவழகியின் கேள்விகளுக்கு பதில் வந்தததாய் தெரியவில்லை. அவர் கேள்வியில் விழிப்படைந்த அனைவரும் ஏதோ பூதகரமாய் நடக்கப்போவதாக உணர, அதை சுதாகரித்த ஓட்டுனரோ " மேடம், துருவ் சார் தான் என்ன அவங்க அப்பாவல உங்க எல்லாருக்கும் ஏதும் ஆபத்து இருக்கலாம்னு அவர்ர பிரண்ட் வீட்ட விட்டுட சொன்னாரு." என்று கூறிவிட மௌனமான அறிவழகி தன் மகன் மீதான நம்பிக்கையில் அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
தன் பிள்ளைகளின் நைவு வந்தவராய், "துருவ், விஜய், ஜீவா மூனு பேரும் என்ன பண்ணுறாங்கன்னே தெரிலையே" என்ற சிந்தனையில் மூவரையும் தொலைபேசியில் அழைத்துப்பார்க்க அதுவோ "நீங்கள் அழைத்த வாடிக்கையாளர் என்று ஆரம்பித்து தொடர்பு கொள்ள முடியாதுள்ளது" என்பதாக முடித்து வைத்தது.
அனைவரும் படபடக்க "பயப்படாதிங்க, நம்ம பசங்க நல்லாதான் இருக்காங்க அதான் நாம வீடியோல கூட பாத்தோமே" தன்னையும் சமாதானம் செய்யாத ஒன்றை கூறி மற்றவர்களை சமாதானம் செய்யத்துவங்கினார்.
அதற்கும் வெகு நேரம் விட்டு வைக்காமல் வண்டி நிறுத்தப்பட வண்டியில் இருந்து இறங்கிய அறிவழகி சுற்றும் முற்றும் பார்த்து ஏதோ நினைவுகள் எழுச்சி பெறத்துடிக்க அவரை பின்தொடர்ந்து அனைவரும் இறங்கி நிற்க அவரின் கேள்விகளிற்கு பதிலாய் அவர்களை வரவேற்க அங்க சிரித்துக்கொண்டு வருவதை போல் தூரத்தில் மங்களாய் தெரியும் உருவம் கண்டு "சீ நீங்களாம் ஒரு மனிசனா! இத்துன வருசமா உங்க கூடதான் குடும்பம் நடத்திருக்கேன்னு எனக்கே கேவலமா இருக்கு நீங்கலாம் மனிச ஜென்மமே இல்ல. பணம் பணம் பணம் னு பொண்டாட்டி புள்ளைனு எல்லாத்தையும் இழந்துட்டு என்னத்த அனுபவிக்க போறிங்க" என்று அறிவழகி ராஜேந்திரனை வசை பாட என்னதான் அவர் கோபமாக திட்டினாலும் பெண் மனமல்லவா? தான் வாழ்வின் பாதி என்று ஏற்றவரை தரக்குறைவாக திட்டவும் முடியாமல் அவர் நடத்திய நாடகங்களை ஏற்கவும் முடியாமல் மனிதாபீமானம் சிறிதும் அற்ற தன் கணவன் முன்னா என் கண்ணீரை காண்பிப்பது என்று அவர் கண்ணீரை தடுத்துக்கொள்ள, ரஜேந்திரன் தன் மனையாளின் வார்த்தைகளின் உண்மை அவரை கூறுபோட்டாலும் ஆண் என்ற அகந்தையும், பணம் என்ற பேராசையும் அவர் மனதிற்கு முடி சூடிய மகுடமாய் தெரிந்தன.
முறைத்துக்கொண்டு முன்னேரிய ராஜேந்திரன் அறிவழகியை ஓர் பார்வை பார்த்துவிட்டு இவளுங்கள அந்த ரூம்ல அடைச்சி வைங்கடா என்று அவர் குரலில் அடிபணிந்த அவர் முகமூடி அடியாட்கள் அவர்களை மேலே இழுத்துச் சென்று அடைத்து வைத்தனர்.
....
YOU ARE READING
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...