36. ருத்ராவிக்ரம்

1.3K 139 144
                                    

36. ருத்ரா விக்ரம்:

நிச்சயதார்த்த திருநாளான இன்று,

மாதங்கி, சுதா இருவரும் தங்களுக்கே உரிய பெண்ணின் இலக்கணத்தை உணர்த்துவதற்காய் பிறந்தவர்கள் போல் அவர்கள் அறையில் தயாராகி காத்திருக்க...

மாப்பிள்ளைகள் இருவரும் அதை உணர்வதற்காய் காதலில் நிறைந்து காத்திருந்தனர். இவர்கள் இருவரையும் தயார் செய்து அழைத்து வந்தான் துருவ்.

ஆனால், அறிவழகியோ யாருடைய வரவுக்காகவோ வழி மேல் விழி வைத்து காத்திருக்க அவரின் கால்கள் அவரை அறியாமல் தவிப்புடன் நடை பழகிக்கொண்டிருந்தன.

துருவ், தான் செய்தது சரியாக வரும் என்ற மனநிறைவில் நேற்றைய நிகழ்வை அசை போட்டான்.

நிச்சயதார்த்த சுபநிகழ்வுக்காய் ஆதுவும், துருவும் தங்கள் கால்களில் பம்பரத்தை கட்டாத குறையாக சுற்றி கொண்டிருந்தாலும் துருவ்விற்கு மனம் சற்று சலஞ்சலமாகவே இருந்தது.

ஏனோ ஜீவா தன் உடன்பிறந்தவன் இல்லை என்றாலும் தன்னை மீறி சகோதர பாசம் வருவதை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அவனை தன்னந்தனியாய் நிறுத்தி பார்க்க மனம் மறுத்தது.

தன்னவனின் சிறு சலஞ்சலத்தை கண்டுகொண்டவள் அவனை அமர வைத்து, "பப்பு... என்னாச்சு?" என்றாள் ஆது.

தன் மனதை படித்திடுவாள் என்பது போல் அவள் விழி நோக்க,  அவன் அருகில் அமர்ந்தவள் "ஜீவாவ பத்தி யோசிக்கிறியா பப்பு?° என்றாள்.

கண்களாலே 'ஆம்' என பதிலளித்தவனிடம் "பப்பு, என்ன இருந்தாலும் ஜீவா உனக்கு தம்பி தான். நீ அவனுக்கு அண்ணா தான். அறிவழகி அம்மாட்ட பேசு பப்பு. அவரை இப்படி தனிமரமா விட முடியாதில்லையா அதுவும் நாம எல்லோரும் இருக்கும் போது??" என்று தன் மனவோட்டத்தை தனக்கே விளக்கிய தன்னவளை மெச்சியவனாய் "பேசறேன் ஆது மா.." என்றுவிட்டு அதே மெச்சுதலோடு அறிவழகியிடம் சென்றான்.

ஆயிரம் இருந்தாலும் பெற்ற மகனாகவே பார்த்த விஜய்யையும் அவரால் விட்டுக்கொடுக்க இயலவில்லை.

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now