Book cover : Staraddixt17 😍. Thanch JinjiBoo!
மார்கழி மாதத்தின் குருதியை உறையச் செய்யும் குளிரை அவள் கண்டுகொண்டாளோ என்னமோ, தன் வெண்மையான கன்னத்தில் விழிக்கிணற்றிலிருந்து வழிந்த கண்ணீரின் வெப்பத்தை உணர்ந்தவளாய் நின்றிருந்தாள் அனம் ரூஹி. அது அவளுக்கு இதமளித்ததோ இல்லையோ !?
"ரூஹி.. அங்க நின்னுட்டு அப்டி என்ன பலமா யோசிச்சிட்டு இருக்க? நேரமாச்சு. போய்ப் படு" என்று அவள் பக்கத்தில் வந்தார் தாய் மதீஹா.
தன் செல்ல மகளின் மாநிற கண்கள் குளமாகி, பெருகி வழிவதைக் கண்ட மதீஹா அவள் தலையைத் தடவி, மாரோடு அணைத்துக் கொண்டார்.
"இங்க பாரும்மா.. கல்யாணம் ங்குறது எல்லார் வாழ்க்கை லயும் வர்ர ஒரு விடயம். அப்டி ஒன்னு வரும்போது தன்னோட குடும்பத்த பிரியறது ங்குறது நிதர்சனமான ஒன்னு. நீ எதுக்கு இவ்ளோ வருத்தமா இருக்க? உன் கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு. சும்மா சும்மா மனச போட்டு குழப்பிக்காத மா.." என்று எல்லா தாய்மார்களையும் போல் ஆறுதல் கூறிய மதீஹா, அதன் பின்னும் ஆறாக ஓடிய ரூஹியின் கண்ணீரைத் துடைத்து விட்டு அவளை அவளது அறையின் அருகில் கூட்டிக்கொண்டு போய் விட்டார்.
தன் அறையில் லெப்டாப்பை மடியில் வைத்தவாறு சுவரில் தலைசாய்த்து கட்டிலில் அமர்ந்திருந்து தூங்கிக் கொண்டிருந்த ஷக்கூராவை நோக்கினாள் ரூஹி. லெப்டாப்பில் அவள் செய்த ப்ராஜெக்ட் பாதியில் இருந்தது. அவளது மடியிலிருந்து லெப்டாப்பை எடுத்து மேசை மேல் வைத்துவிட்டு, தலையை மெதுவாகப் பிடித்துக் கட்டிலில் வைத்தாள். தூக்கத்திற்குத் தொல்லையாக இருந்துவிடக் கூடாதேயென்று தலையணையை ஷக்கூராவின் தலைக்குக் கீழ் வைக்கும் முயற்சியைக் கைவிட்டாள். போர்வையொன்றால் போர்த்திவிட்டு, பாத்ரூம் போய் முகத்தைக் கழுவிக்கொண்டு வரலாமெனத் திரும்பிய அவள், தன் முன் ஆளுயரத்தில் இருந்த கண்ணாடியில் தன்னை நோக்கினாள்.
YOU ARE READING
முகில் மறை மதி ✔
Short Story#1 ••• அந்த இரு விழிகள்.. நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன. அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடைந்தன. •••