அத்தியாயம் 2

279 30 71
                                    

அந்த வீதியின் ஓரத்தில் கம்பீரமாக நின்றிருந்தது அந்த பெரிய அழகான வீடு. எப்பொழுதும் நிசப்தமாக இருக்கும் அந்த வீடானது இன்றைய நாட்களில் சற்று கலகலப்பாக மாறியிருந்தது.


புதுமாப்பிள்ளையின் வீடல்லவா..?

"இம்ரான்.." என அழைத்தவாறு இம்ரானின் தாய் சுலைஹா அவனது அறைப் பக்கம் வந்து கதவைத் தட்ட, புதுமாப்பிள்ளைக்கு வரிசையாகக் காத்திருந்த வேலைகளின் பழுவினால் வந்த களைப்போ என்னவோ..

அவன் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. நேரமோ ஒன்பதைத் தாண்டிக் கொண்டிருந்தது. கடைசியாக ஒருமுறை சுலைஹா 'தடார்' எனக் கதவை ஒரு தட்டுத் தட்டிவிட்டு சென்றார். இதனால்தான் விழிப்பு வந்ததோ என்னவோ..

கண்களைக் கசக்கியபடி எழுந்து வந்தான் இம்ரான்.

"இம்ரான்.. எழுந்திட்டாயா? இரவு, சாமான் வாங்குறதுக்காக ரொம்ப நேரம் அலைஞ்சதால டயர்டா இருக்கும் ல? ஆனால்.. இன்னிக்கு காலைல நீ ஏதோ வேலையா வெளிய போகனும் ன்னு சொன்னதனால தான் எழுப்பி விடலாம் ன்னு வந்தேன். நீ ஃப்ரஷ் அப் ஆயிட்டு இரு. நான் போயி காலை சாப்பாடு எடுத்து வைச்சிட்றேன்" என்றவாறு சுலைஹா அவ்விடம் அகன்று சென்றார்.

அங்கே விராந்தையில் ஏதோ செய்துகொண்டிருந்த இனாயாவைக் கண்டதும், "இன்னிக்கும் ஏதாச்சும் வாங்குறதுக்கு இருக்கா?" என்று சற்று கடுமையான தொனியிலே இம்ரான் கேட்க, அண்ணன் விளையாட்டுக்காகத் தான் இவ்வாறு கேட்கிறான் என எண்ணிய அவளோ,

"ஆங்.. இருக்கு நாநா.. இன்னிக்கு ரொம்பவே நிறைய திங்க்ஸ் வாங்க இருக்கு. ஆனா.. அதயெல்லாம் வாங்குறதுக்கு உன்னை தான் கூட்டிட்டுப் போவேன். என்ன.. ரெடியா?" என சற்று குறும்பு நிறைந்த புன்னகையுடன் கூறினாள். இதை இம்ரான் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

"போடி.. அதுக்கு வேற ஆளா பார்த்துக்கோ.." என்று உண்மையிலேயே கோபமாகக் கூறிவிட்டு இனாயாவைப் பார்க்காமலேயே அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான். இனாயாவோ நிஜமாலுமே சற்று அதிர்ந்துதான் போனாள். என்ன ஆயிற்று இவனுக்கு?

முகில் மறை மதி ✔Tempat cerita menjadi hidup. Temukan sekarang