கிணற்றுக்குள்ளிருந்து யாரோ கத்துவதுபோல் இருக்க, ரூஹி தன் கண்களைத் தேய்த்துக் கொண்டு திறந்து பார்த்தாள். கத்திக் கொண்டிருந்தது அவளது அன்புக் கணவன் இம்ரான். அவளை ஏதும் ஏசவில்லை. தன்னைத்தானே ஏதோ சொல்லிக் கத்திக் கொண்டு அந்த அறையிலிருந்த மேசையைப் போட்டுப் பிரட்டிக் கொண்டிருந்தான்.
கடிகாரம் நேரம் ஐந்தரை என அறிவிக்க, முந்தைய இரவு 'டின்னர் பார்ட்டி' க்கு சென்று தாமதமாக வந்து தூங்கியதால் கொஞ்சம் தாமதமாக எழுந்ததை உணர்ந்தாள் ரூஹி.
வேகமாகப் போர்வையை அகற்றிவிட்டு அவசரமாகச் சென்று காலைக்கடன் முடித்துத் தொழுகையையும் முடித்துக்கொண்டு வந்த ரூஹி, இம்ரானின் அருகில் சென்று,
"எதற்காக இத்தனை டென்ஷன்?" என வினவிய பின்தான் அவன் பல் கூட விளக்காமல் ஒரு முக்கியமான ஃபைலைத் தேடிக் கொண்டிருப்பது தெரிந்தது.
"அட.. ஒரு ஃபைலயா இவ்ளோ நேரமா தேடறீங்க? நீங்க போய் ஃப்ரஷ் ஆயிட்டு தொழுதுட்டு வாங்க. அது வரைக்கும் நான் தேடிட்டு இருக்கேன்" என்றாள் ரூஹி சற்று அக்கறையாக. ஆனால் அவன் இருந்த அவசரத்தில் அந்த அக்கறையையெல்லாம் எங்கே கவனித்திருப்பான்? இன்னும் டென்ஷன் அதிகமாகி, நடு நெற்றியைத் தேய்த்துத் தேய்த்து நெருப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தான். ரூஹி தான் சொன்னதையே மீண்டும் சொல்ல,
"அந்த ஃபைலோட அருமையெல்லாம் உனக்கு எப்டி தெரிய போகுது? நீ உன்னோட லிமிடட் சீரியஸ்னஸ்ஸோட தேடி அது கிடைச்சிடுமா என்ன? இன்னிக்கு எவ்ளோ முக்கியமான கான்ஃபரன்ஸ் இருக்கு தெரியுமா? டாக்குமென்ட்ஸ் லாம் அந்த ஃபைல்லதான் போட்டு வச்சிருந்தேன். நான் தேடிக்குறேன். ஏற்கனவே, லேட்டா எழுந்துட்டேன். இதுல இந்த ஃபைலயும் எங்க வச்சேன் ன்னு தெரியல. லாஸ்ட் நைட் என் மேனேஜர் க்கு மரியாதை கொடுத்து டின்னர் க்கு போனதாலதான் இப்டி லேட்டாயிடுச்சி. ஓ எம் ஜி.. நான் இப்ப என்ன பண்ணுவேன்?? பல்லு விளக்கல ன்னா கூட நோ ப்ராப்ளம். எனக்கு அந்த ஃபைல் இருந்தா போதும்" என எரிச்சலின் உச்சகட்டத்தில் கத்திக்கொண்டே மீண்டும் வீடு முழுவதும் அங்கு, இங்கு என ஓடி ஓடித் தேடிக்கொண்டிருந்தான்.
YOU ARE READING
முகில் மறை மதி ✔
Short Story#1 ••• அந்த இரு விழிகள்.. நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன. அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடைந்தன. •••