அத்தியாயம் 5

203 27 28
                                    

"அவர்கிட்ட எதுக்கு கேக்க சொல்ற?" என்று கேட்டேன். அவள் தன் உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்தபடி,

"ஹஹ்.. நீ இவ்ளோ அப்பாவியா இருக்கியே டி.." என்றுவிட்டு விறுவிறுவென அங்கிருந்து அகன்று சென்றாள். நான் சுவற்றில் சாய்ந்து கொண்டேன்.

என்னதான் நடக்கிறது ?

"மகள்.. சாரா.." என்று என் மாமி கூப்பிடுவது எனக்குக் கேட்க, நான் எந்த உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாமல் வீட்டினுள் சென்றேன். மாமி என் கையில் ஒரு கோப்பையைத் தந்தார்.

"ஏன் மாமி நீங்க டீ போட்டீங்க? நான் போட்டிருப்பேன் ல?" என்றவாறு அதனை வாங்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்தேன்.

"நீ இன்னிக்கு தானேம்மா வந்திருக்க? என் கையால உனக்கு ஒரு டீ போட்டுத் தரலாமே ன்னு தான். இனிமேல் தாராளமா நீ டீ போடலாம். சரி.. நான் போட்ட டீ எப்டி இருக்கு ன்னு சொல்லும்மா.." என்றவாறு புன்னகைத்தார். நானும் பதிலுக்குப் புன்னகைத்தவாறு மாமி கொடுத்த டீயை மெதுவாக அருந்தியவாறு,

"மாஷா அல்லாஹ்.. உங்க டீ ரொம்ப நல்லா இருக்கு மாமி.." என்றேன். அவரும் மகிழ்ச்சியுடன்,

"சந்தோஷம்.." என்றார். அவருடன் சிறிதுநேரம் கதைத்திருந்துவிட்டு நான் என் அறைக்குச் சென்றேன்.

என் கணவரிடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது. என்னவென்று பார்த்தேன். அவர் வரத் தாமதமாகுமென அறிந்து, என் மாமியிடம் சொல்வதற்காக மீண்டும் அறையைவிட்டு வெளியே சென்றேன். மாமியைத் தேடியவாறு சமையலறைப் பக்கமாக செல்ல, என் மாமி யாருடனோ பேசிக்கொண்டிருந்த சத்தம் கேட்டது. நான்,

"மாமி" என்று அழைத்தவாறு சமையலறையின் உள்ளே நுழைந்தேன். அங்கு என் மாமியோடு பேசிக் கொண்டிருந்தது வேறு யாரும் இல்லை. மின்ஹா தான்!

என்ன இவள்?
எனக்கென்றால் சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை.

முகில் மறை மதி ✔Donde viven las historias. Descúbrelo ahora