"ஷக்கூ.. என்னதான் பண்றியோ நீ.. சீக்ரமா வாயேன். இன்னிக்கு நம்ம அழகுராணி அய்மன்கூட சீக்கிரமா ரெடியாகிட்டா ன்னா பாரேன். நீ இன்னும் அப்டியே இருக்க. மச்சான் எப்டிதான் உன்னை சமாளிக்கிறாரோ தெரியல. ஷாப்பிங் போறதுக்கு ரெண்டு மணிநேரமா அப்டி என்னதான் ரெடி ஆகுற ன்னு தெரியல ப்பா. உன் பையன் வேற ரொம்ப வித்தியாசமான சத்தமா போட்டுட்டு இருக்கான். அப்றம் (diaper) டயபர் மாத்தறேன் அது இது ன்னு அதுக்கு ஒரு ரெண்டு மணிநேரம் வேஸ்ட் பண்ணுவ. என்னால ன்னா சுத்தமா முடியல.." என்று தல்ஹாவைத் தோளில் தூக்கிக்கொண்டு ஹாலில் காத்துக் கொண்டிருந்தான் அஹ்மத்.
"அட.. ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டாச்சு ன்னு இப்டி உலகத்தயே கூட்டிட்டு இருக்கியே. வந்துட்டேன் வந்துட்டேன். கத்தாத.." என்றவாறு மாடியிலிருந்து தன் பர்ஸுடன் ஓடி வந்தாள் ஷக்கூரா.
இன்னும் ஒரு வாரத்தில் அவர்களது மாமியின் மகள் ரீஹாவுக்குக் கல்யாணம். இது ஒரு ஞாயிற்றுக்கிழமையாதலால் எல்லாருக்கும் நேரமிருக்கும் வேளையில் கடைக்குப் போய் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வந்துவிட வேண்டுமென்றே ரூஹியும் ஷக்கூராவும் குழந்தைகளையும் கிளப்பிக்கொண்டு அஹ்மதுடன் ஷக்கூராவின் கணவரின் காரில் கிளம்பினர்.
----
அது அந்த நகரத்தின் மத்தியிலுள்ள ஒரு பெரிய ஷாப்பிங் மால். அதன் முன்னால் போய் நின்ற காரிலிருந்து இறங்கிய ஷக்கூராவும் ரூஹியும் அய்மனுடன் ஷாப்பிங் மாலின் உள்ளே சென்றனர். தல்ஹாவைத் தூக்கிக்கொண்டு ஷாப்பிங் செய்வது கஷ்டமாக இருக்கும் என்பதால் அவனை அஹ்மதிடமே விட்டுவிட்டுச் சென்றனர்.
சிறுவர்களுக்கான ஆடைகள் பரத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றவர்கள், அங்கு சற்றுநேரம் ஆடைகளை அலசிக்கொண்டிருக்க,
"உம்மீ.. எனக்கு இதெல்லாம் வேணாம். இங்க பாருங்க இந்த ட்ரெஸ்ஸுக்கு கையே இல்ல. நான் போட மாட்டேன்" என்றவாறு அங்கிருந்த ஒரு சட்டையைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் அய்மன்.
DU LIEST GERADE
முகில் மறை மதி ✔
Kurzgeschichten#1 ••• அந்த இரு விழிகள்.. நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன. அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடைந்தன. •••