அத்தியாயம் 19

131 22 31
                                    

தன் மகள் சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை. இவளென்ன பொய்யா சொல்லப் போகிறாள்?

"நல்லவன், வல்லவன், பொறுப்பானவன், எந்த விடயங்களிலும் எந்தவித அதிருப்தியும் காட்டுவதில்லை, தான் உண்டு தன் பாடுண்டு எனக் கிடப்பவன்,நேர்மையானவன்..!? இம்ரான்!!"

"என்னம்மா சொல்ற நீ?" மதீஹா வாய்விட்டுக் கேட்க,

"ஆமா ம்மா.." என்றாள்.

சில கணங்களுக்கு நிசப்தமே நிழலாட, மதீஹா துவங்கினார்.

"ரூஹி.. எல்லாம் நல்லதுக்குத்தான். நான் உனக்கு ஒன்று சொல்றேன். புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. இப்டி மார்க்க பற்றுல குறை இருக்குறவங்கள யாரு சொல்லித் திருத்தனும்? ஒழுங்கா இருக்குறவங்க தானே?"

"ம்ம்.." - ஆமோதித்தாள் ரூஹி.

"அப்போ.. அல்லாஹ் உனக்கு அப்படிப்பட்ட ஒருவர் கணவனாகனும் ன்னு நாடியதுக்கு ஒரு காரணம் இருக்காது?"

மதீஹா இவ்வாறு கேட்டதும் ரூஹிக்கு ஏதோ மண்டையில் உதித்தது.

"நீங்க சொல்றது சரிதான் மா.. நான் உடனே இப்டி கண்ண கசக்கிட்டு வந்து உங்ககிட்ட சொல்லிருக்கக் கூடாது. முதல்ல அவர்கிட்ட சொல்லி, புரிய வைக்க முயற்சி செஞ்சிருக்கனும்.." என ஒரு முடிவுடன் தெளிவாகக் கூறினாள்.

"ம்ம்.. ரொம்ப நல்லாவே புரிஞ்சிக்கிட்ட.." என்று சற்று நிம்மதியுடன் இன்னும் கொஞ்ச நேரம் அவளுடன் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் மதீஹா.

ரூஹி சற்று அமர்ந்திருந்து இன்று ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என எண்ணியவாறு யோசிக்கத் தொடங்கினாள். ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு இருக்க இம்ரான் ஒன்றும் சின்னக் குழந்தையில்லை. மார்க்கத்தின் அடிப்படைக் கடமை பற்றிய அறிவு இல்லாமல் போகும் அளவிற்கா கவனமின்றி இருப்பது? இருந்தாலும் சொல்லிப் பார்க்கலாம்! இருந்தும் கேட்காவிட்டால்?? அப்புறம் என்ன? இப்படிப்பட்டவருடன் எனக்கு ஒரு வாழ்க்கை தேவைதானா??

முகில் மறை மதி ✔Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin