அத்தியாயம் 14

157 24 59
                                    

ஹால் பக்கமாக நான் செல்ல, அவர் அதோ அந்த சோபாவில்தான் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அவர் வீடு. அவர் எப்படி வேண்டுமானாலும் அமர்வார். எனக்கு அதில் ஒன்றும் பிரச்சினையில்லை.

"உங்க முடிவை தெளிவா சொல்ல முடியுமா?" என்று சற்றும் வருத்தமில்லாதவாறு முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன். அவர் ஒரு ஏளனமான புன்னகையை என் பக்கம் வீசினார்.  எனக்கு இவர்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்பதை அவர் தன் 'புன்'னகை மூலம் எனக்கு ஞாபகப்படுத்த விழைந்தார் என்பது எனக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. நானும் அது தெரிந்தவாறு காட்டிக்கொண்டால் அவர் பரிதாபமென்று பெயர்சூட்டப்பட்ட பார்வையால் என்னை வருத்துவாரென்பதை நான் அறிந்திருந்தேன். எனவே, நான் அதற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. அப்படியே உணர்ச்சிகளைக் காட்டாமல் நிற்க முயன்றேன்.

"ஏன்? என்னாச்சு? போக்கிடம் தேட வேண்டிவரும் ன்னு பயமா இருக்கா?" என்று கேட்டார்.

நான்தான் எதிர்பார்த்தேனே..

"இல்லை" என்றேன் ஒரு கணமும் தாமதிக்காமல். அவர் சற்று அதிர்ந்தாலும் அதைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்பது எனக்கு விளங்கிற்று. அவர் ஏதும் பேசாமல் மௌனமாய் இருந்தார். நானும்,

"தாராளமாக யோசித்து சொல்லலாம்" என்பது போன்று ஒரு பார்வையுடன் அவர் முன் அவ்வாறே நின்றிருந்தேன்.

அதுதான் அவர் என் கணவராக இருந்த கடைசிநாள்..

மகிழ்ச்சி.
அவர் விரும்பும் வாழ்வை அவர் வாழட்டும்.
நான் எதற்கு நடுவே??

----

நான் என் வீட்டிற்கு வந்து இத்தோடு ஒரு வாரம் ஆகின்றது. அதாவது, என் தாய்க்கு சொந்தமான எம் வீட்டில்தான் இருக்கிறேன்.

இப்போது அல்லாஹ்வைத் தவிர நான் மட்டுந்தான் எனக்கு..

அவர்..
அவர்தான்..
என் கணவராக இருந்தவர்..

முகில் மறை மதி ✔Where stories live. Discover now