அத்தியாயம் 4

240 27 36
                                    

ஜன்னல் கண்ணாடியி்ன் வழியே உள்நுழைந்த சூரியனின் கதிர்கள் சூடான உணர்வை உண்டாக்க, நித்திரை விட்டெழுந்தாள் அனம் ரூஹி.பெரிய கொட்டாவி ஒன்றை விட்டவாறு சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த கடிகாரத்தை ஏறிட்டாள். பதறிப்போய் எழுந்து அமர்ந்து, தலைமேல் கைவைத்து அமர்ந்து கொண்டாள்.

நேரம் ஏழு மணியாம். கடிகாரம் இப்போதுதான் அவளிடம் சொன்னதாம்!

அருகில் ஷக்கூரா லெப்டாப்பில் ஏதோ செய்துகொண்டு இருந்தாள். அவளைப் பார்த்து,

"ப்ச்.. ஷக்கூ.. என்னை எழுப்பிருக்கலாம் ல?" என்று கவலையுடன் கூறவும் மதீஹா அறையினுள் வரவும் சரியாக இருந்தது.

"நான் எழுப்பினேன். நீ எழுந்தா தானே? நீ தான் ராத்திரி முழுக்க ஏதோ சாராவோ லாராவோ.." என்று ஷக்கூரா சொல்ல வர, ரூஹி அவளை முறைத்துக் கொண்டு பாய்ந்து வந்து தன் கைகளால் அவளது வாயைப் பொத்தினாள். இந்த திடீர் செய்கையைக் கண்ட மதீஹா குழப்பத்துடன் இவர்களை நோக்க, பற்களைக் காட்டினாள் ரூஹி.

"என்னடி ஆச்சு? தாத்தாக்கும் தங்கச்சிக்கும் இடையில என்ன நடக்குது இங்க?" என்று புருவத்தை முடிச்சுப் போட்டுக்கொண்டு அவர் கேட்க, சுதாகரித்துக் கொண்டவாறு,

"அது.. எங்க ரெண்டு பேருக்கும் இடையில ஆயிரம் இருக்கும் மா.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க" என்றவாறு கண்ணடித்துவிட்டு எழுந்து சென்றாள் ரூஹி. மதீஹாவும்,

"என்னவோ பண்ணுங்க ரெண்டு பாசமலர்ங்களும்.." என்றவாறு அவ்விடம் அகன்றார்.

சுபஹ் தொழுகை கழாவான கவலையில் ரூஹியின் முகமோ வாடிப்போய் இருந்தது. அதனால் காலைக்கடன்களை அவசரமாக முடித்துவிட்டு வுழூச் செய்து, இரண்டு ரக்அத்துக்களைத் தொழுது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோறியவாறு தொழும் அறையில் சிறிதுநேரம் சாய்ந்து கொண்டாள். மனது சற்று சரியானதன் பின்பு எழுந்து சென்று ஹாலில் அமர்ந்திருந்தாள்.

முகில் மறை மதி ✔Where stories live. Discover now