அத்தியாயம் 9

176 25 33
                                    

ஒரு புதிய நாள் மலர்ந்து விட்டிருந்தது..

அன்று ரூஹியும் இம்ரானும் ரூஹியின் வீட்டிற்குச் சென்று வருவதாக இருந்தது. ஏனெனில் அவள் நாளை அமெரிக்கா செல்ல இருக்கிறாள். அதன் பின் இரண்டு மாதங்களுக்கு அங்கே தான். அதற்கு முன்னர் ஒருமுறையாவது வீட்டிற்கு சென்று வர வேண்டுமே..

மகளுக்குக் கொடுப்பதற்காகப் பல அவசியமான பொருட்களை எடுத்து வைத்திருந்தார் மதீஹா. மருமகனுக்கும் மகளுக்கும் பகல் விருந்து ஒன்றையும் தயார் செய்வதாக இருந்தார்.

பகலுணவுக்காக அங்கு சென்றனர் இருவரும்.

ரூஹியின் வீட்டில் புதுமணத் தம்பதிகளை மிகவும் அழகாக வரவேற்று உபசரித்தனர். அஹ்மதுக்கும் ஷக்கூராவுக்கும் மகிழ்ச்சி கரைதாண்ட, நீண்ட நேரம் அவளுடன் கதைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், சிறிதுநேரத்தில் அவள் மீண்டும் சென்று விடுவாள் என நினைப்பதற்குக் கவலையாக இருந்தது.

அங்கு சற்று நீண்டநேரம் கழித்துவிட்டு, மதீஹா கொடுத்த பொருட்களை வாங்கிக்கொண்டு இஷா நெருங்கியதும் இம்ரானின் வீட்டுக்குக் கிளம்பினர். அடுத்தநாள் அதிகாலையிலேயே ஏர்போர்ட்டிற்குக் கிளம்பிச் செல்ல வேண்டி இருந்ததால் இப்பொழுதே விடைகொடுத்துவிட்டுச் செல்ல வேண்டி இருந்தது.

ரூஹி தான் போய் வருவதாகக் கூற, சில நிமிடங்களுக்கு அங்கு கண்ணீரே வார்த்தைகளுக்குப் பதிலாக வெளியேறிக் கொண்டிருந்தது. எல்லோரிடமும் முஸாபஹா செய்து ஸலாம் கூறியவாறு விடை பெற்றாள் அனம் ரூஹி. இம்ரானும் "சென்று வருகிறேன்" எனக் கூறி விடைபெற்றான்.

----

இம்ரானின் வீட்டில் இனாயா, சுலைஹா மற்றும் மஜீத் என எல்லோரும் அமெரிக்காப் பயணத்திற்குண்டான பொருட்களையெல்லாம் பைகளில் போட்டு தயார் செய்து கொண்டிருந்தனர். வீடு போய் சேர்ந்த இவர்களும் அவர்களுடன் கலந்து கொள்ள, எப்படியோ எல்லாவற்றையும் தயார்செய்து முடித்தனர்.

தன் லக்கேஜை அலசிய ரூஹி, சாராவின் டயரியை எடுத்துக் கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள். நான்கு மணி நேரத்தைப் பயணத்தில் மட்டும் வீணடிக்காமல் தவிர்ப்பது என்பது ஒரு புத்தகப்புழுவிற்குப் பெரிய விடயமே இல்லை, அவளது கையில் ஒரு புத்தகம் இருந்தால்..

முகில் மறை மதி ✔Donde viven las historias. Descúbrelo ahora