அத்தியாயம் 10

182 23 30
                                    

என் கண்கள் சற்று அதிர்ந்து தான் போயின.


"என்ன சாரா..? உன் ஹஸ்பன்ட் கூட டின்னர் அவுட்டிங் வந்து இருந்தியோ? உன்னை நான் அப்டி லாம் என்ஜாய் பண்ண விட மாட்டேன் டார்லிங்.." - மின்ஹா

அவள் எதற்கு என்னை அனுமதிக்க வேண்டும்?
எனக்கு இப்போது கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இவர்கள் என்னிடம் எதையோ மறைத்துள்ளார்கள்.

ஆம்!!

"உனக்கு என்னதான் வேணும்?" என்று அனுப்பினேன். ஆனால்

"ஹெஹெ.. பார்க்கதான போற?" என்றாள் அதற்கு அவள். மீண்டும் மீண்டும் என் செல்ஃபோன் திரை ஒளிர்ந்தது. ஆனால் எனக்கு அதை எடுத்துப் பார்க்கத் தோன்றவில்லை. வெறுப்பாக இருந்தது.

என் கணவரைப் பார்த்தேன். எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் அவர் தன் பாட்டில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தார். இவர் எனக்குத் துரோகம் நினைத்திருப்பாரா? இல்லை.. இன்று ஏப்ரல் முதலாம் திகதியோ? அன்று தானே ஷைத்தானியக் கூத்துக்கள் அறங்கேறும்! என் ஃபோனின் முன் திரையைப் பார்த்தேன். அப்படி எதுவும் இல்லை.

நாம் மாமி வீட்டிற்கு சென்று சேர்ந்தோம்.

மாமி வந்து கதவைத் திறந்து ஸலாம் சொல்ல, நான் பதில் உரைத்துவிட்டு மேலும் ஏதும் பேசாமல் நேராக என் அறைக்குச் சென்றேன். எனக்கு ஏதோ திக்பிரமை பிடித்தாற்போல் இருந்தது.

என் அப்போதைய மனநிலையை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்..

----

மாதங்கள் பல கடந்துவிட்டன..

நான் என் கணவருடன் பல தடவைகள் டின்னருக்காக சென்று உள்ளேன். ஆனால் அதே இடம், அதே ஹோட்டல், இடைக்கிடை அதே உணவு மற்றும் அதே வில்லி.. (மின்ஹாவை சொன்னேன்) நாம் இருவரும் சென்றிருக்கும் வேளையில் சரியாக அவள் வந்து சேர்வாள். எப்படி?

முகில் மறை மதி ✔Where stories live. Discover now