அத்தியாயம் 12

184 23 41
                                    

இரவாகியிருந்தது.

க்கத்து வீட்டுப் பெண்மணி ரூஹியுடன் நெருக்கமாகப் பழகியதால் அவர் ரூஹியின் தேவைகளையும் விசாரித்து, சமையலறையை ஒழுங்குபடுத்திக் கொள்ள உதவினார்.

ரூஹி தனக்கு அலுப்புத் தெரியாமலிருப்பதற்காக மாலையில் செய்யத் தொடங்கிய எம்ப்ரய்டர் வேலையைப் பூர்த்தி செய்திருந்தாள். ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த அவள் அதனைக் கையில் எடுத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. திடுக்கிட்ட ரூஹி அசுரகதியில் பரபரவென முந்தானையை எடுத்துத் தலைமுடியை மறைத்து, முகத்தையும் ஒரு பகுதியினால் மறைத்துக் கொண்டாள்.

வந்தது இம்ரான் தான்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, முகத்தைத் திறந்தவாறு, ஸலாம் சொன்னாள். ஒரு அதிவேக பதிலை உதிர்த்துவிட்டுத் தன்பாட்டில் நேராக ஆஃபிஸ் ரூமிற்குள் சென்றான் இம்ரான். ரூஹி,

"இவர் கொஞ்சம் பேசினால்தான் என்ன? ஆயுள் குறைந்துவிடும் என பயமோ? வால்டமாட் போன்று திடும் திடுமென எங்கெங்கிருந்தோ தோன்றி மறைகிறாரே.." என நினைத்து சற்று சலித்துக் கொண்டாள். சரியாக அந்நேரத்தில் இம்ரான் ஃபோனைக் காதில் வைத்துக்கொண்டு யாருடனோ ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு ஹாலுக்கு வந்து, சோபாவில் தொப்பென்று அமர்ந்தான். சிறிதுநேரத்தில் அழைப்பைத் துண்டித்த அவன், அங்கிருந்து அகல முற்பட,

"டின்னர் நான் பண்ணட்டுமா?" அவன் ஏதாவது பேச வேண்டுமென்பதற்காகவே இப்படிக் கேட்டாள் அவள். ஆனால் என்ன பயன்? தலையை மேலும் கீழும் என ஆட்டிவிட்டு நகர்ந்தான் அவன். அவளும் அதைச் சரியென்பதாக ஏற்றுக்கொண்டு தனக்குத் தெரிந்த உணவைத் தயார்செய்யத் தொடங்கினாள். நேரமும் நத்தை வேகத்தில் நகர, கொஞ்சம் மெதுவாகவே உணவைத் தயார் செய்தாள், அப்பொழுதாவது கொஞ்சம் நேரம் போகுமென்று..

அவள் வந்த முதல் நாளே நேரம் நகர மறுக்க, இந்த இரண்டு மாதங்களை எவ்வாறு கழிப்பேனோ? என இருந்தது.

முகில் மறை மதி ✔Donde viven las historias. Descúbrelo ahora