இம்ரானின் ஆவேசம் நிறைந்த வார்த்தைகள் செல்போனின் வழியே சீறிக்கொண்டு எதிர்ப் பக்கத்திற்குச் சென்றடைந்தன.
"மா.. என்ன நெனச்சிட்டு இருக்கா உங்க மருமகள்? நான் ரொம்ப பிஸியான ஆள் ன்னு உங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லாவே தெரியுமா இல்லையா? ஓ மை.. வர்க் ல இருக்குற டென்ஷன் போதாது ன்னு இவ வந்து எனக்கு பாடம் நடத்திட்டு இருக்கா. என்ன பார்த்துக்க எனக்குத் தெரியும். ஆறு மாசமா எனக்கு call மேல call லா போட்டு கல்யாணம் கல்யாணம் ன்னு உயிர எடுத்தீங்களே.. அந்த டார்ச்சர் கொஞ்சம் முடியட்டும் ன்னு சரி ன்னு சொன்னேன் பாருங்க. என்ன சொல்லனும். How can she be such annoying? Huh? உங்ககிட்ட சொல்லியும் என்ன பயன்? உலகத்துல இல்லாத மரகதம் ன்னு என்னமா குதிச்சீங்க? See.. I can't manage this anymore. இனி உங்க இஷ்டம். இனிமேலாச்சும் ஒழுங்கா என்னோட work, busy schedule, habits எல்லாத்தையும் புரிஞ்சுக்குற ஒருத்தியா தேட ட்ரை பண்ணுங்க.."சுலைஹாவை ஒரு வார்த்தை கூட பேசவிடாமல் படபட வென்று பாதி ஆங்கிலத்தில் ஏதேதோ கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்த இம்ரான், எரிச்சலுடன் தனக்குத்தானே ஏதோ முனகியவாறு தன் செல்போனை சோபாவில் எறிந்துவிட்டு நகர்ந்தான். சமையலறையில் அமர்ந்திருந்த ரூஹியின் காதில் இவன் பேசியவற்றையெல்லாம் காற்று கொண்டுபோய் சேர்த்துவிட்டிருந்தது.
சுலைஹாவுக்கோ உலகம் புரண்டுபோனது. எத்தனை ஆசையாய் ரூஹியை மருமகளாக ஏற்றிருப்பார்? அப்படிப்பட்ட இன்னொருத்தியைத் தேடினாலும் கிடைக்குமா? கேள்விக்குறிதான். தான் சொல்ல வந்ததைத் தன் ஆசை மகன் லட்சியம் செய்யாமல் தன்னிடமே எரிந்து விழுந்த வருத்தம் இன்னொரு பக்கம். அப்படியே நின்ற நிலையில் இருந்தார். அவன் எவ்வளவு இலேசாக சொல்கிறான்? இனிமேலாவது அவனுக்கு ஏற்றவாறு ஒருத்தியைத் தேடுமாறு.. அப்போது ரூஹியின் கதி? அவள் வாழ்க்கை என்னாவது?
எண்ண ஓட்டத்தில் லயித்திருந்ததால் இனாயா அழைப்பதும் கேட்காமல் நின்றிருந்தவர், அவள் வந்து உலுக்க, திடுக்கிட்டுத் திரும்பினார். சுலைஹாவின் முகத்தைப் பார்த்த இனாயாவுக்கு அவரது வலி சுமந்த விழிகள் ஏதோ பிரச்சனை என்பதை உணர்த்த,
YOU ARE READING
முகில் மறை மதி ✔
Short Story#1 ••• அந்த இரு விழிகள்.. நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன. அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடைந்தன. •••