அத்தியாயம் 17

130 23 37
                                    

இம்ரான் சொன்னதை சரியாகத்தான் புரிந்து கொண்டோமா என உறுதிப்படுத்திக் கொள்ள,

"என்ன சொன்னீங்க?" என்றாள்.

"அதை கழட்ட முடியுமா?" என்றான் மீண்டும்.

"எதுக்கு?"

"இல்ல.. கொஞ்சம் பெரிய டின்னர் பார்ட்டி.. நாம ரெஸ்பெக்ட்டா போக வேணாமா?"

"ஆமா.. ஆனா நான் நிகாப் போட்டுட்டு வர்ரதுல என்ன குறை வந்துடப் போகுது? எனக்கு இது கஷ்டமாவும் இல்ல"

"ரொம்ப பேசுறதுக்கு டைம் இல்ல. ஜஸ்ட் ரிமூவ் & கம்"

"ஆனால்.. நான் எப்டி? முன்னாடியே சொல்லி இருந்தா நான் வர முடியாது ன்னாவது சொல்லிருப்பேனே ங்க.. என்னால எப்டி நிகாப் இல்லாம வர முடியும்?"

ரூஹியின் இந்த வார்த்தைகள் அவனை எரிச்சலில் மூழ்கடித்திருக்க வேண்டும். அதனால் அவனது வார்த்தைகளிலும் எரிச்சல் பொங்கி வழிந்தது.

"அட ச்ச.. இப்போ என்ன பண்ண போற நீ? என் கூட வர்ரதா இருந்தா அத கழட்டி வச்சிட்டு வரலாம். இல்ல ன்னா இங்கேயே இருந்துக்கோ.. ஓ காட்.. எனக்கு நிகாபே பிடிக்காம இருக்குறதுக்கு இதுவும் ஒரு காரணம்" என இம்ரான் பொரிய,

"என்ன? உங்களுக்கு நிகாப் பிடிக்காதா?" என விழி விரித்துக் கேட்டாள் ரூஹி.

"ம்ஹூம்.." என இம்ரான் பதிலளித்த விதத்தில் அவனது கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது. அடுத்த வசனம் பேச ரூஹிக்கு வார்த்தை கிடைத்தது அதிசயம்தான்.

"ஆனா.. கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க.. உங்களுக்கு நிகாப் பிடிக்காது ன்னு சொல்லலயே.." - பயம் கலந்த அதிர்ச்சியுடன் அவனிடம் பதில் எதிர்பார்த்து நின்றாள்.

"அதையெல்லாம் இப்போ டிஸ்கஸ் பண்றதுக்கு டைம் இல்ல. உன் முடிவ சொல்லு. அங்க எல்லாரும் காத்துட்டு இருப்பாங்க. " என அவள் கேட்ட கேள்வியை சட்டை செய்யாமல் அலட்சியமாக அவளிடம் கேட்டான்.

பாவம்! அவள் என்ன செய்வாள்? இதுவரை எங்கும் நிகாபை அவள் கழற்றியதில்லை, கழற்றப்போவதுமில்லை. நிரந்தர நிகாபியாக இருப்பது அவளது குறிப்பிட்ட குறிக்கோள்களில் ஒன்று. எனவே, அவன் அவ்வாறு சொன்னதும் விக்கித்துப் போய்,

முகில் மறை மதி ✔Where stories live. Discover now