அத்தியாயம் 6

216 27 35
                                    

"சாப்பிடலாமா..?"

பாவமாகத் தன் முகத்தை வைத்துக்கொண்டு கேட்ட ரீஹாவைப் பார்த்ததும் தான் ரூஹிக்கு தான் யார்? எங்கே இருக்கின்றோம்? தனது பயோடேட்டா (Biodata) என எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. இவ்வளவு நேரமும் சாராவின் டயரிக்குள் தன்னை மறந்து நீந்திக் கொண்டு இருந்துள்ளாள். நல்லவேளை.. ரீஹாவிடம்,

"நீ யார்" என்று அவள் கேட்டுவிடவில்லை. அவளது இயல்பை ரீஹா அறிந்துதான் இருந்தாள். ஆனால் அவளது இரைப்பை அறியவில்லையே..

தனக்குத் துணையாக இருக்க தன் சகோதரி வந்துள்ளாள். அவளுக்குப் பசிக்குமே. தாய் சமைத்துவிட்டுத் தானே போயிருக்கிறார். என்பதெல்லாம் ஒவ்வொன்றாக அவளது மூளைக் கதவைத் தட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் ரீஹா அவளை ஒரு குலுக்குக் குலுக்க,

"அல்லாஹ்.. வாசிக்கிற இன்ட்ரஸ்ட் ல நான் அதயெல்லாம் மறந்தே போயிட்டேன் ரீஹா. உனக்கு பசிக்குதா? வா சாப்பாடு எடுத்து தர்ரேன். நாம ரெண்டு பேரும் சாப்பிடலாம். இந்த தடவை மட்டும் மன்னிச்சிக்கோ. ஆன்ட்டி கிட்ட மட்டும் சொல்லிடாதே பட்டுக்குட்டி. அப்றம் என்ன எப்பவும் வாச் பண்ணிக்கிட்டே இருப்பாங்க" என்று தலையில் கைவைத்தபடி கெஞ்சும் தோரணையில் சொன்னாள்.

"இது என்ன எனக்குப் புதுசா? இந்த மாதிரி நான்தான் நிறைய தடவை உங்ககிட்ட அனுபவித்து இருக்கேனே. தயவுசெய்து உங்க மாமியார் வீட்டுக்குப் போய் இப்டி பண்ணிடாதிங்க. அப்றம் உங்க இஷ்டம்" என்று கொஞ்சம் சிரித்தவாறு கேலி செய்யும் தொனியில் கூற,

"எஹ்.. நீயும் தொடங்காதே ரீஹா. என்ன யாருமே நிம்மதியா ரெண்டு நிமிஷம் வாசிக்க விடமாட்டேன்றிங்க. ஒரு நிமிட வாசிப்போட அருமை உங்க யாருக்குமே தெரியாதா? கொஞ்சம் வாசிச்சேன் ன்னா நான் என்ன குறைஞ்சா போயிடுவேன்?" என்று ரூஹி அடுக்கிக் கொண்டே போனாள்.

"சாப்பிட்டத்துக்கு அப்றம் வந்து பட்டிமன்றம் நடத்தேன்.." கண்ணுக்குப் புலப்படாமல் மல்கிய கண்ணீரைத் துடைப்பதுபோல் பாசாங்கு செய்தபடி அழுகுரலில் கூறியவாறே ரூஹியை இழுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள் ரீஹா. இருந்தாலும் பாவம் இவளிடம் கொஞ்சமாக டயலாக் அடித்திருக்கலாம் என்றிருந்தது ரூஹிக்கு.

முகில் மறை மதி ✔Donde viven las historias. Descúbrelo ahora