அத்தியாயம் 24

193 21 34
                                    

ஸ்டியரிங்வீலில் கைகளும் ரோட்டின்மேல் கண்களும் இருந்தாலும் யோசனை என்னவோ ஷாப்பிங்மாலில் அவன் கண்டவளின் மீதே இருந்தது.

அவள்தானே அவள்??
ரூஹி..!?
அவள் குழந்தைதானே அது!?
அவள் சாயலேதான்!!
மறக்க முடியுமா?

நினைவலைகள் புறப்பட்டு ஐந்து வருடங்களுக்கு முன்பு சென்று பிரேக் போட்டன.

----

அமெரிக்காவின் வீதிகளில் செல்லும் அந்த கனரக வாகனங்களின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்க, தன் அறையில் அமர்ந்து ஒரு ஃபைலைப் புரட்டிக் கொண்டிருந்த இம்ரான், தன் செல்போனின் தொடுதிரை ஒளிரவே அதனை எடுத்துப் பார்த்தான். ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது, ரூஹியிடமிருந்து..

"Assalamu alaikum. I'm going.. But i made sure that I didn't sign those papers yet. I'm giving you some more time. I believe in your change & rest is up to you" என இரு நொடிகளில் அதனைப் படித்தவனின் முகத்தில் எரிச்சல்தான் தொற்றிக்கொண்டது.

"Who the hell asked you for time? Those papers will knock your door tomorrow. Leave me alone. Goodbye" என்று அசுரகதியில் அவளுக்கு செய்தி அனுப்பியவன், அமர்ந்திருந்த கட்டிலில் கையால் வேகமாக அடித்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றான். எதிர்ப்பக்கம் அதைப் படித்த ரூஹியும்,

"அவர் முடிவு, அவர் வாழ்வு.." என எண்ணியவாறே அவனது நம்பரை ப்ளாக் செய்தவாறு தன்பாட்டில் இருந்தாள். அவனுக்கு எவை பற்றியும் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ரூஹிக்கு உதிக்கவில்லை. ஆம். அவனுக்கு இங்கு நடந்தவை தெரிவிக்கப்படவில்லை; தெரியவில்லை. ரூஹி மறுமணம் புரிந்துகொண்டதாகவே இந்த நொடி வரை எண்ணிக்கொண்டுள்ளான்.

ஆனால் அவள் கொடுத்த அவகாசத்தில் ஒரு நொடியையாவது லட்சியம் செய்யாமல் இருந்ததைப் பின்னர் எல்லாம் முடிந்ததும் எண்ணி வருந்தி என்ன பயன்?

!!

சரிசமமான வசதி, படித்தவள், வங்கியில் வேலை என வரிசையாக இம்ரானைத் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு வரன் வந்தது. வீட்டினருக்கோ அவ்வளவாகத் திருப்தியே இல்லாவிட்டாலும் இம்ரானுக்கோ தன் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருத்தியாகவே அவள் தென்பட்டாள்.

முகில் மறை மதி ✔Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin