மாமியின் வீட்டில் ரூஹியை எல்லோரும் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள். இத்தனை அன்பான உறவுகளைப் பார்த்த ரூஹி 'அல்ஹம்துலில்லாஹ்' கூறிப் பலமுறை அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டாள்.
இம்ரானின் வீட்டிலிருந்த உறவுகள் ஒவ்வொருவராக விடைபெற, வீட்டினர் மட்டும் எஞ்சினர். அவர்களது வீடு ஷக்கூரா சொன்னவாறு நன்கு பெரிதாகத் தான் இருந்தது. எல்லோரும் சென்றுவிட்ட பின் வீட்டை ஒருவித அமைதி ஆட்சி கொண்டதாய் உணர்ந்தாள்.
வீடு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் போதுமான ஆட்கள் இல்லாவிட்டால் வீடே வெறிச்சோடிப் போன உணர்வுதானே வரும்?
இம்ரானோ ஏதும் அவ்வளவாக ரூஹியிடம் பேசிக் கொள்ளவில்லை. இதனை இனாயாவும் கவனிக்காமலில்லை.
ரூஹியைத் தன் அறைக்கு அழைத்துச் சென்று அவளுடன் கதைத்துக் கொண்டிருந்தாள் இனாயா. இருவரும் தோழிகளாகவும் இருந்ததனால் கதைப்பதற்கென விடயம் தேட வேண்டி இருக்கவில்லை. கதைத்துக் கொண்டிருக்கும் போது இனாயா,
"ரூஹி.. எங்க நாநா அதிகமா எதுவுமே பேச மாட்டான்.." என சொல்ல,
"ஆமா.. தெரியுது" என்றவாறு ஆமோதித்தாள் ரூஹி. இனாயாவின் அறையை நோட்டமிட்டுக் கொண்டிருந்த ரூஹி,
"உங்க வீட்ல புத்தகங்கள் இருக்கா?" எனவும் கேட்டு வைத்தாள். சிரித்த இனாயா,
"மேடம் ஏன் இன்னும் அது பற்றி கேக்கல ன்னு தான் நான் யோசிச்சிட்டு இருந்தேன். எங்க வீட்ல யாருக்கும் ரீடிங் ல சொல்ற அளவுக்கு ஈடுபாடு கிடையாது. நான் ஸ்கூல் முடிந்த காலத்துல கொஞ்சமா நாவல்கள் ரீட் பண்ணிட்டு இருந்தேன். இப்போ அந்த இன்ட்ரஸ்ட் போயிடுச்சி" என்றாள்.
இப்படியே நேரம் செல்ல மஹ்ரிப் நேரம் முடிந்து கொண்டிருந்தது.
"இனா.. வா நாம கிச்சனுக்குப் போகலாம். மாமி மட்டும் தனியா இருப்பாங்க. அவங்க கூட பேசிட்டு இருக்கலாம்" என்றவாறு ரூஹி அங்கிருந்து அகல முற்பட, மூன்று கோப்பைகளை ஒரு ட்ரேயில் சுமந்தவாறு அவ்விடம் வந்து சேர்ந்தார் சுலைஹா. புன்னகையுடன் இவர்களிடம் சுலைஹா ட்ரேயை நீட்ட, அதிலிருந்து காஃபி கப்பை எடுத்துக் கொண்ட ரூஹி,
YOU ARE READING
முகில் மறை மதி ✔
Short Story#1 ••• அந்த இரு விழிகள்.. நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன. அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடைந்தன. •••