அத்தியாயம் 3

241 27 37
                                    

சாராவின் டயரிக்குள் புதைந்துபோன ரூஹிக்கு கடிகாரத்தைப் பார்க்கக்கூட தோன்றவில்லை. ஷக்கூரா தலையணையால் முகத்தை மறைத்துக்கொண்டு தூங்க, இவள் நைட் லேம்ப்பில் வெளிச்சத்தை அதிகமாக வைத்தபடி வாசித்தாள். கண் கெட்டுப் போய்விடுமென மதீஹாவிடம் வாங்கும் ஏச்சு மண்டையில் ஓங்கியொலித்தது. கண்தான் கெட்டாலும் நமக்குக் கதைதானே முக்கியம்!

•••

என் கணவரின் காரில் சற்றுநேரம் பயணம் செய்த பின்னர் நாம் அதன் வாயிலில் போய் நின்றோம். அது உண்மையிலேயே மிகப்பெரிய ஒரு நட்சத்திர ஹோட்டல் அளவிலான ரெஸ்டாரன்ட்டாகும். உள்நுழைவதற்கென இருந்த கதவோ மாணிக்கத்தால் அமைக்கப்பட்டிருப்பது போல கண்ணாடியாலாக்கப்பட்டு தகதகத்துக் கொண்டிருந்தது.

நான் "ஆ.." என்று வாயைப் பிளந்துகொண்டு பார்ப்பதைக் கண்ட என் கணவர்,

"சாரா.. என்ன இப்டி பார்த்துட்டிருக்க? இது ஒரு ஹை க்லாஸ் ரெஸ்ட்டாரண்ட். கேஷுவலா இருந்துக்க. வா உள்ள போலாம்" என்று முன்னே செல்ல, நானும் பின்தொடர்ந்தேன்.

அந்தக் கதவு நாங்கள் முன்னே செல்ல, திறந்துகொண்டது. என் வாழ்நாளிலேயே இன்றுதான் இவ்வாறான ஒரு இடத்திற்கு நான் வந்துள்ளேன். இங்கு கல்யாணவீட்டைப் போன்று நாலாபக்கங்களிலும் பெரிய பெரிய எல்.ஈ.டி க்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. வரவேற்பறை போன்று இருந்த ஒரு விசாலமான இடத்தில் பலவித மலர்ச் செண்டுகள் வைக்கப்பட்டு செயற்கை வாசனை கமழ்ந்து கொண்டிருந்தது. அங்கு இருந்த மேசைகளும் கதிரைகளும் வெல்வட் துணியால் போர்த்தப்பட்டு மிகவும் நேர்த்தியாகப் போடப்பட்டிருந்தன. அங்கங்கு பெரிய பெரிய அழகான சாடிகளில் செயற்கைத் தாவரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டு மூன்று சிறு செயற்கைக் குளங்களும் அமைக்கப்பட்டு பலநிறங்களில் மீன்கள் போடப்பட்டிருந்தன. வெயிட்டர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து கொண்டு ஒவ்வொரு மேசையிலும் இருப்போரைக் கவனித்த வண்ணமிருந்தனர்.

முகில் மறை மதி ✔Donde viven las historias. Descúbrelo ahora