சுமார் இருபது மணிநேரம் பயணம் செய்த பின், வைகறை நேரத்தில் விமானம் அமெரிக்காவில் தரையிறங்கியது.
ரூஹிக்கோ உற்சாகம் மேலும் மேலும் கூடியது. ஒரு புது நாட்டிற்கு வந்திருக்கிறோம் என்ற நினைப்பு இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது. விமான நிலையத்திலிருந்து அவர்கள் வெளியேற, இம்ரான் ஏற்பாடு செய்த வாகனம் முன்னால் வந்து நின்றது. அதில் ஏறிக்கொண்ட அவர்கள் இம்ரான் தங்கியிருந்த இடத்தை நோக்கிப் பயணமாயினர். அமெரிக்காவின் பெரிய வீதிகளையும் பல அடுக்குமாடிகள் கொண்ட கட்டடங்களையும் முற்றும் விலகியிராத அந்த இருளிலும் காரின் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ரூஹி.
கடைசியாக இம்ரான் தங்கியிருந்த, பல மாடிகள் கொண்ட ஃப்ளாட் க்கு வந்து சேர்ந்தனர். அறைக்குச் சென்று சேரும் வழியில் ரூஹி பலதையும் வினவியபடி சென்றாள்.
"இங்க இன்னும் முஸ்லிம்ஸ் இருக்காங்களா?"
"தெரியல.." என்ற இம்ரானை ரூஹி விசித்திரமாகப் பார்த்தாள்.
"இத்துன வருஷமா இங்க தானே இருக்கிங்க? அப்றம் எப்டி தெரியாம இருக்கும்?" என மீண்டும் வினவிய ரூஹிக்கு பதில்தான் கிடைக்கவில்லை.
அறை வாயிலை அடைந்தனர். இம்ரான் கதவைத் திறக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த ரூஹி எதேச்சையாகப் பக்கத்து அறையை நோக்க, அங்கு ஒரு ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண்மணியும் அவரது குழந்தைகள் என மதிக்கத்தக்கவாறு சிலரும் அந்த அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். ரூஹிக்கோ ஆச்சரியமாக இருந்தது. பக்கத்து அறையிலே உள்ளவரே ஒரு முஸ்லிமாக உள்ளார், இது தெரியாமல் இருக்கின்றதே இவருக்கென்று..
ஒரு பணியாளன், தள்ளுவண்டி போன்ற ஒன்றில் இவர்களது பொருட்களையும் பைகளையும் கொண்டு வந்து கொடுக்க, அவற்றையும் எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைந்தனர். ரூஹி நிகாபைக் களைந்தவாறு அந்த இடத்தை நோட்டமிட்டாள்.
அதனை அறை என்று சொல்ல முடியாது. ஒரு சிறிய குடும்பம் தங்கியிருப்பதற்குப் போதுமான எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு வீடாகவே இருந்தது. சமையலறை, இரு படுக்கையறைகள், ஹால், வெற்றிடம், பால்கனி என விசாலமாகவே இருந்தது. வந்த களைப்பு சற்றுத் தீருமாறு சோபாவில் அமர்ந்திருந்துவிட்டு, ஃப்ரஷ் ஆகிய பின்பு வீட்டை முழுமையாக, ஒழுங்காகப் பார்க்கலாம் என நினைத்தபடி சற்று ஓய்வெடுக்கச் சென்றாள் ருஹி. இம்ரானோ வந்ததும் வராததுமாய் ஆஃபிஸ் அறை போன்று இருந்த ஒரு அறைக்குள் சென்று ஏதோ தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
DU LIEST GERADE
முகில் மறை மதி ✔
Kurzgeschichten#1 ••• அந்த இரு விழிகள்.. நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன. அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடைந்தன. •••