அத்தியாயம் 15

144 23 24
                                    

ரூஹியின் சிந்தனையைக் கலைத்தது அந்த அதான் சத்தம். அங்கு அருகில் எங்கும் மஸ்ஜித் ஏதும் இருக்கவில்லை. ரூஹிக்கு அதான் கேட்காமல் இருப்பது அவ்வளவாக திருப்தி இல்லை. அதனால், தொழுகை நேரத்தில் அதான் ஒலிக்குமாறு தன் ஃபோனில் ஒரு ஏற்பாட்டை செய்திருந்தாள். மஃரிப் வரை நேரம் போவதே தெரியாமல் வாசித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அவள் மனதில் அடுத்து எந்தப் புத்தகத்தை வாசிக்கலாம் என்ற எண்ணம் வந்து சென்றது. அதனைக் கொஞ்சம் பிறகு பார்க்கலாமென எண்ணியவாறு மஃரிப் தொழுகைக்காக வுழு செய்யச் சென்றாள்.

வுழூ செய்வதற்காக செல்லும்போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் நன்மையுண்டு. அதனால்தானோ என்னவோ ரூஹி வுழு செய்யச் செல்லும்போது கொஞ்சம் மெதுவாக, நிறைய எட்டுக்கள் வைத்து நடந்து செல்வாள். ஆம்.. நன்மைகள் பெற்றுக்கொள்வதில் எமக்குப் பேராசை இருக்க வேண்டுமே..

தொழுகையை முடித்துக்கொண்டு கொஞ்சம் குர்ஆன் ஓதிவிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். எதுவும் செய்யத் தோன்றவில்லை அவளுக்கு அலுப்பாக இருந்தது. அப்படியே சற்றுநேரம் கழிய, இஷாவும் நெருங்கியது.

திடீரெனக் கேட்ட கதவு தட்டும் சத்தத்தில் அங்கு நீண்ட நேரமாக நிலவிய அமைதி விடைபெற,

"ரூஹி.." என அழைக்கும் சத்தம் கேட்க, அவள் அது அந்தப் பக்கத்துவீட்டுப் பெண்மணிதான் என அடையாளம் கண்டுகொண்ட அவள், மகிழ்ச்சியுடன் சென்று சலாம் கூறியவாறு கதவைத் திறந்தாள். பதில் கூறியவாறு தன் குழந்தைகளுடன் உள்ளே நுழைந்தார் அந்தப் பெண்மணி. வரவை ஏற்று அமரச்செய்தவள் அவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். நேரம் போவதே தெரியாமல் சுவாரசியமாக உரையாடலில் லயித்திருக்க, இஷாவுக்கான அதான் செல்ஃபோனில் ஒலித்தது. அதனைத் தொடர்ந்து ரூஹியின் வேண்டுகோளின் பேரில் அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து ஜமாஅத்தாக இஷாத் தொழுகை நிறைவேற்றப்பட்டது.

ரூஹியின் வீட்டிலும் எப்போதாவது தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்படுவது உண்டு. இருபத்தேழு மடங்கு நன்மை அல்லவா? சாதாரண விடயமா?

முகில் மறை மதி ✔Donde viven las historias. Descúbrelo ahora