மதிய வேளை என்பதால் காலேஜ் கேன்டீனில் மாணவர்கள் ஆங்காங்கே கும்பலாக கூட்டம் கூடியப்படியே அமர்ந்துகொண்டு இருக்க.. சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தப்படியே அனைவரையும் தன் கண்களால் சலவையிட தனக்கு எதிர் திசையில் அமர்ந்த இருவரை பார்த்தவள் அவர்களின் மௌன நிலையைக் கண்டு சட்டென்று ஒரு பாடல் தோன்ற பாடினாள்.
"கண்கள் இரண்டும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்..." எனப் பூவிழி (இழையின் தங்கை) பாடவும்
"தீரனை சைட் அடித்தால் காதல் என்று தான் அர்த்தம்.." என தன் பின்னால் ஒரு குரல் கேட்க.. "யாரோ" என நினத்தவள் "ஐயோ இல்லை.." என கூறியவாறே அவசரமாக பின்னால் திரும்பி பார்க்க நித்தியமதி(மகேஷின் தங்கை) நின்றுகொண்டிருக்க அவளை முறைத்துக் கொண்டே அவளின் கையில் இருந்த பப்ஸ்யை வெடுக்கென்றுப் பிடிங்கி வாயில் வைத்தவாறே "ராகமா படற ராகம் கொன்றுவேன் டி...." எனக் கூறி பப்ஸை விழுங்குவதில் கூறியாக இருந்தாள்..
"லைன் நல்லா இருந்துச்சுன்னு பாடன பூமா" என நித்தியா கூறவும்..
"ஜஸ்ட் சைட்டிங்க் தான் ஓகே யா... லவ் எல்லாம் இல்லை..." எனக் கூறியவள் பப்ஸ் சாப்பிடுவதில் கவனமாக இருக்க
"நானும் ஜஸ்ட் சைட் தானே பாடன.. நீயேன் ஏன் லவ் பத்தி சொல்ற... "என நித்தி கூறவும்
வாயில் வைத்து இருந்த பப்ஸை வாயில் வைத்தப்படியே அவளை முறைத்து கொண்டே
"இ...ரு.. நித்தி ஏதாவது சாப்பிட இருக்கானு பார்த்துட்டு வரேன்' எனக் கூறி எழுந்து சென்றவளை சிரிப்புடன் பார்த்தாள் நித்தியா....!!!
***************************
மதிய வெயிலில் வேப்பமர நிழலில் நின்றவனின் கன்னத்தில் வேப்பஇலைகள் முத்தமிட்டு கீழே விழ.. அவனின் கேசத்தை வெப்பக் காற்று தடவி செல்ல தன் கேசத்தை வலது கையால் அடக்கியவாறே நுழைவுவாயிழையே பார்த்தவனின் எதிர்பார்ப்பே கூறியது.
'யாருக்கோ காத்திருக்கிறான்." என்று தெளிவாக தெரிந்தது....
ஆனாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளத்தவன் போல் சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தாலும் அவ்வப்போது அவனின் பார்வைக் நுழைவாயிழை நோக்கியவாறே இருந்தது..!அவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்கமால் நுழைவுவாயிலிருந்து ஒரு இளைஞன் வந்துகொண்டிருந்தான்..!! பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட இருபது வயது வாலிபனாக தான் இருக்க முடியும்.. தலையில் சந்தன நிறத்தில் எதையோ அப்பி இருந்தான்.. கருப்பாக இருந்தான்.. எதையோ வாயில் வைத்து அடைத்து இருந்தான்... அவனின் அருகில் சென்றவன் "நீங்க அந்த போன் கடையில வேலை பாக்கற தம்பி தானே..!! நீங்க இந்த காலேஜ்ல தான் படிச்சதா கேள்வி பட்டேன்.."