அனைத்து சடங்குகளுடன் கூடிய ஆர்பாட்டங்களும்,சண்டைகளும்,
முடிய!!! நேரமும் யாருக்கும் நிற்காமல் பனித்துளி போல் கரைய இரவு நேரமும் வந்தது!! அனைவரும் அறக்கப்பறக்க ஏதோ வேலையில் மூழ்கி இருக்க. அனைவரையும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்தவன் தன் அருகில் வந்த பழனியிடம்(இழையின் தாய்)) "மணமக்கள் இருவரையும் கவனிக்காமல் தாங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் அத்தையே!!!..." என தூய செந்தமிழை தனக்கு தெரிந்த பாஷையில் கேட்டவனை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்து நமட்டு சிரிப்புடன் "தங்களுக்கு பதிலளிக்கும் நிலையில் நான் இப்போது இல்லை மருமகனே!! சிறுது நேரம் என்னை தொந்தரவு செய்யாமல் உங்கள் வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.."
"எனது வேலையா??? அது என்னது அத்தையே???"
"என் புள்ளையைப் பார்த்து வழியறதை சொன்னேன்!! சும்மா சும்மா என்னை கூப்பிட்டுகிட்டு இருக்கறத நிறுத்திட்டு! அவகிட்ட போய் பேசு போ!!" என பழனி சொல்ல...
"அப்படியே அந்த குந்தாணி என்கிட்ட பேசிட்டு தான் வேற வேலை செய்வா பாரு" என மனதில் நினைத்து "அதை விட்டால் வேறு வழி இல்லை!! தமைக்கையே தெரிந்தே பாலங்கிணற்றில் விழுந்துவிட்டேன்!! இப்போது உன் மகளின் மூஞ்சியை மட்டும் தான் பார்க்கவும் வேண்டும் பேசவும் வேண்டும்..! வேறு வழியே இல்லை." என சோக கீதம் வாசிக்க
"எம்மா இந்த ஆல் இண்டியா ரேடியோவை ஆப் பண்ணுமா எப்ப பார்த்தாலும் தூய தமிழில பேசறேன்னு நம்ம கழுத்தை அறுத்துக்கிட்டு கிடைக்கு" ((இப்ப பேசற தமிழுக்கே அர்த்தம் புரிய ஒருவருசம் ஆகும் இதுல செந்தமிழ் வேறயா))) என கத்தினாள் விழி...
"என்ன கொழுந்தியா?? கொழுப்பா?? மாமன்னு கொஞ்சமாவது மரியாதை இருக்கா உனக்கு...ஒழுங்கா மாமன்னு கூப்பிடு"என மிரட்டல் போல் சொல்ல
"என்னது மாமாவா!!! பாருடா அப்படியெல்லாம் மரியாதையும் தர முடியாது மாமான்னு கூப்பிட முடியாது! ஓடியே போயிரு!! மாமான்னு கூப்பிட்ட வேணுமாம்ல மாமானு"