ப்ரியாவுடன் சேர்த்து இழையையும் அவளிற்கு தெரியாமல் வேகேட் செய்தவன் சபரியையும், பிரியாவையும் வழியனுப்பி விட்டு வரவே பாதி இரவாகிருந்தது..!!
இரவின் ரம்மியமான வெளிச்சத்தில் தன் வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்தி கொண்டிருந்தவனின் மனத்திலோ ஆயிரம் ஆயிரம் கேள்விகள்கள் இருந்தாலும்....!! தன்னவளின் மௌனம் அவனை கொல்லாமல் கொன்றது..!! மதியம் அவனிடம் காரில் வைத்து பேசியது தான்.. அதற்கு மேல் அவளும் பேசவில்லை... இவனும் ஏன் பேசவில்லை என கேட்கவுமில்லை..!! ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தபடியே அவன் இருக்க...!!அவனை கவனிக்கும் நிலையில் அவள் தான் இல்லை..!! மதியம் நடந்த நிகழ்வுகளில் நின்று போனது இவளின் மனது..!!!அவன் சொன்ன அந்த வார்த்தை "யாரு போன்ல பேசி இருந்தாலும் சபரி (உன்னவனின்) குரல் உனக்கு தெரியாம இருக்குமா..." எனக் கேட்டவனின் குரல் மட்டும் அவள் மனதில் ஓட அன்றைய கசப்பான நிகழ்வுகள் அனைத்தும் அவளின் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.! கண்மூடி சாய்ந்து கொண்டவளின் நினைவுகளை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது இழையின் இனிமையான காதல் நினைவுகள்..
"அவளின் காதலின் ஆழத்தில் அவனின் பிம்ப நிகழ்வுகள்..
"சின்ன வயசுல இருந்தே நானும் மகேஸும் ஒரே பள்ளிக்கூடம் தான்.. போகும் போதும் சரி வரும் போது சரி எங்க இரண்டுப் பேரையும் கூட்டிட்டு வரதும், போறதும் என் பெரிய அத்தான் தான்..(பார்த்திபன்) எனக்கு எங்க பெரிய அத்தான்னா ரொம்ப பிடிக்கும்.. என்ன கொஞ்சம் அவரைப் பார்த்த பயம் ஏன்னா எனக்கும் ,இவனுக்கும் ஐஞ்சு வருஷம் முத்தவரு... பார்க்க பெரிய கிடாய் மாதிரி இருப்பாரு..!! நான் அவரோட இடுப்புக்கு தான் இருப்பேன் தெரியுமா.. கரடுமுரடான ஒரு ஆள் என் பெரிய அத்தான்...!! அதனால தான் என்னமோ அவர்கிட்ட நான் அதிகம் பழகினதும் இல்லை, அதிகம் பேசினதும் இல்லை...!! ஆனா என் செல்லம் பெரிய அத்தானுக்கு ஜஸ்ட் அப்போசிட்..!! அழகான கரடி பொம்மை மாதிரி இருப்பான் என் மகேஷ் என்னோட ஆசைக் கரடிக்குட்டி....!! எனக்கும் அவனுக்கு ஒரே வயசுங்கறதுனாலயோ என்னவோ சின்ன வயசுல இருந்தே எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும்.! ஒரே ஸ்கூல், ஒரே கிளாஸ்.. அப்படின்னு என் பக்கத்திலேயே இருப்பான்.! ஸ்கூல் முடிக்கற வரைக்குமே நான் என்ன பண்ணாலும் அந்த செயல்ல மகேஷ் இருப்பான்.. வீட்டில கூட நான் எங்காவது போறேன்னு சொன்னா போதும் அம்மா சொல்ற ஒரு வார்த்தை மகேஷ் கூட போ... மகேஷ் வா.. மகேஷ் கூட விளையாடு...!! மகேஸும், நீயும் கடைக்கு போயிட்டு வாங்க... மகேஸும், நீயும் உட்கார்ந்து படிங்க.. நான் எங்க எப்படி போனாலும்..மகேஷ்...மகேஷ்...
மகேஷ்... என் சந்தோஷம் ,என் துக்கம், என் நண்பன், என் காதலன் எல்லாமே அவன் மட்டும் தான்..!! சின்னவயசுல இருந்து இப்ப வரைக்கும் அவன் கூட மட்டும் தான் இருக்கேன்...!! அவன் பண்ற அலப்பறை கொஞ்சம் மட்டும் இல்லை ரொம்ப அதிகமா இருக்கும்...!! எனக்கு தெரிஞ்சு எட்டாவதுல இருந்தே லவ் பண்றன்னு சொல்லிட்டு சுத்தனவன்.. அவனோட லவ் எல்லாம் அந்தந்த வருஷம் ரிலீஸ் ஆகிற படத்தை பார்த்து தாங்க வரும்...