அவன் 44

379 13 2
                                    

"என்ன டி புருஷன் அடிபட்டு பெட்ல கிடைக்கிற கொஞ்சம் கூட அக்கறையில்லமா நீ பாட்டுக்கு ஜூஸ் குடிச்சுட்டு இருக்கறவ..." என ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த
இலையினியைக் கேட்க அவளோ அங்கு ஒருவன் இருப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் பழச்சாறை அருந்துவதில் குறியாக இருந்தாள்.

அவளை முறைத்தவாறேப் படுக்கையிலிருந்து எழுந்து சாய்ந்து அமர்ந்தான்.... 

       
"அவன் எழுந்து அமர்ந்த நேரம் பார்த்து தீரன் உள்ளே வர அவனை பார்த்தவள் "தீரா ஜூஸ் குடிங்க ஆப்பிள் ஜூஸ் செமையா இருக்கு..."என அவனை அழைக்க அவனோ அவளை பார்த்து சிறுபுன்னகையுடன் "நீ குடி
மா..." என கூறிவிட்டு மகேஷ்யிடம் திரும்ப இழை தன் கோர்ட்டை எடுத்துக் கொண்டு வெளியில் புறப்பட்டாள்.

"சார் வர சொன்னீங்கலாம்..." என கேட்டவனிடம் "அது வந்து தீரன்..." என மகேஷ் ஆரம்பிக்க... தீரனே பேச்சை தொடர்ந்தான்.

"சார் அன்னிக்கே என்ன பத்தி சொன்னல, இன்னும் என்மேல உங்களுக்கு இருக்கற சந்தேகம் போகளையா..." என கேட்டவனிடம் சற்றே சிரிப்புடன்

"அதெல்லாம் ஒன்னும் இல்ல தீரன் நா அன்னிக்கு நீங்களும் அண்ணாவும் பேசும்போதே உங்களைப் பத்தியும் அண்ணாவைப் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன்.

உங்களோட பேச்சு  எதுல  இருந்து ஆரம்பிச்சுதுன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் பார்த்தப்ப என் அண்ணா ரத்த கரையோட நிற்கும்போது உங்கமேல எனக்கு அத்தனை கோபம் வந்துச்சு.  ஆனா நீங்களும் அண்ணாவும் பேசறதக் கேட்கவே என்னோட பொறுமையை இழுத்து பிடிச்சுக்கிட்டு இருந்தே.. என் அண்ணா உங்ககிட்ட பேசனதக் கேக்கும்  போதுதா எனக்கு எல்லாம் புரிஞ்சுது. உங்க மேலயும் எந்த தப்பும் இல்லை, என் அண்ணன் மேலயும் இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன். எனி வேஸ்.. ரொம்ப நாளாத் தேடிட்டு இருந்த ஒரு கேஸ் இப்போ முடியப் போகுது.. இப்போதா  நிம்மதியா பீல் பண்ற.. அடுத்தடுத்து என்ன பண்ணனும்னு சொல்லிட்டேன்..  என் சிஷ்யன் அண்ட் என் சிஷ்யை பார்த்துக்குவாங்க.." (உங்க யாருக்கும் சிஷ்யன்&சிஷ்யை யாருன்னு தெரியாதுல இனிமே செமயா வருவாங்க பாரு..) எனக் கூறியவனின் கண்கள் ஏதோ முடிவு செய்து விட்டதைக் கூறியது.

மாயவனோ... தூயவனோ....நாயகனோDonde viven las historias. Descúbrelo ahora