"ஏய்.. ச்சி.. என்ன டா பண்றீங்க இரண்டு பேரும். ஒரு வயசு பையன் உங்க கூடயே இருக்கேன்டா..." என மித்திரன் கூறி திரும்பிக் கொள்ள
அவளின் இறுக்கத்தை குறைத்து விலகி நிற்க முற்பட்டவனை மீண்டும் அணைத்தவள் பின்னால் திரும்பி நின்றுகொண்டிருந்த மித்தரனைப் பார்த்து "கரடி. இப்போ எதுக்கு டா இங்க வந்த... புருஷன், பொண்டாட்டி இருக்கற ரூம் கொஞ்சம் அப்படி,இப்படின்னு தான் இருக்கும். உன்னையாரு இங்க வர சொன்னாங்க, ஒழுங்கா ஓடி போயிடு, என் புருஷன் இன்னைக்கு தான் ஆசையா கட்டிப் பிடிச்சு இருக்கான். அதைக் கூட ஒரு ஐஞ்சு நிமிஷம் விட மாட்டயா நீ.. ஒழுங்கா போ டா... நான் என் மகேஷ் அத்தான் கூட கொஞ்சம்.." என முடிக்கும் முன்பே அவளின் பேச்சு நின்றிக்க...
"சனியனே. அடங்கவே மாட்டயா நீ.
ஒரு அண்ணங்கிட்ட பேசற பேச்சா இது கருமம்.. கருமம்.." என தலையில் அடுத்துக் கொண்டவன் அவளின் பேச்சு வரவில்லை என திரும்பி பார்க்க இரண்டு கால்களையும் எக்கி நின்றவாறே மகேஷின் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டவாறே அவன் கன்னத்தில் இதழ் ஒற்றி"இப்படி ஒன்னு ஒன்னா தருவேன் நீ எண்ணிக்கோ..." என கூறி அவன் கன்னத்தை எச்சில் செய்ய.
"ஏய்... எருமை..ச்சீ.." என மீண்டும் பின்னால் திரும்பி நின்றவன்
"நான் இங்க தான் இருக்கேன்.. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம கிஸ் பண்ணிட்டு நிக்கற..." என மித்தரன் கூற
"நீ இன்னும் போகலையா.." எனக் கேட்டுக்கொண்டே மகேஷின் கன்னத்தில் இதழ் பதித்து "
எங்கிட்ட வெட்கம் இல்லை.. உனக்கு வெட்கமா இருந்தா ஒழுங்கா ஓடி போ ஐஞ்சு நிமிஷத்துல என் மகி வருவான்..." என மித்திரனிடம் கூறியவள் மீண்டும் அவனின் கன்னத்தில் இதழ் பதிக்க
"ச்சி.. இயாக்கி த்து.." என கூறியவன் அவர்களின் அறையை விட்டு நகர
"லூசு. அவன் ஏதாவது நினைச்சுக்கப் போறான். தள்ளி நில்லு.." எனக் கூறியவனை முறைத்தவள்
"ஏன் கிஸ் கொடுக்கும் போது சொல்ல வேண்டியது தானே.. ச்ச போ மேக்ஸ் டப்பா.." எனக் கூறி அவனிடமிருந்து விலகியவளை கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தவன் அவளின் உயரத்திற்கு குனிந்து அவளின் கன்னத்தில் அழுத்தமாக இதழ் ஒற்ற விக்கித்து நின்றாள் பேதை.