"என்னமோ சரியில்லையே இரு டி அவளை கூட்டிட்டு வரேன் " என கூறி பழனி நகரவும் இழையின் அறை திறக்கவும் சரியாக இருந்தது!! அறையிலிருந்து வெளியில் வந்தவளை சற்றே அதிர்ச்சியுடன் பார்த்தனர் அனைவரும்..!!!
"அடி ஆத்தி!!!... சாச்சுப்புட்டா டா மகேசு... சாச்சுப்புட்டா.! ஒத்த நொடியில கௌவுத்துட்டா டா!!" நெஞ்சில் கை வைத்தவாறே நினைத்தவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான் இடைவரை நீண்டு இருக்கும் ஈர கூந்தலை ஒற்றை க்ளிப்பில் அடக்கி இருந்தாள் !! க்ளிப்பில் அடங்காத முடிகள் அவளின் கண் இமைகளில் முத்தமிட்டுகொண்டே இருக்க அதை பார்த்தவனுக்கு சற்று பொறாமைக் கூட வந்தது.!
காற்றில் பறக்கும் ஒற்றை
கூந்தல் கூட உன் இமைகளில் முத்தமிட்டு செல்ல..!! என் இதழ்கள் உன் இமை தீண்ட தவமிருக்க!!! என் இமையை காணாமல் இருக்கும் உன் இமையின் மௌனம் தான் என்னவோ!! என் தூயவளே..!!மொழுமொழுவென இருந்த மூக்கின் நுனியை பிடித்து இழுக்க தோன்றிய மனதைக் கட்டுப்படுத்த திணறித்தான் போனான்!!.!! அவனது பார்வை அவளின் செவ்விதழை காண அதில் என்றும் ஒட்டி இருக்கும் புன்முறுவலில் மேலும் கிறங்கி போனான் அவன்!!..
மல்லிகையாய் மலர்ந்திருக்கும் உன் செவ்விதழை மென்மையாக வருடிய காற்றை சிறை பிடிக்க முயன்று உன் மூச்சு காற்றில் சிறைகைதியாகி தோற்றேனடி...
அடர் நீலநிற சட்டையும் வெள்ளைநிறத்தில் பட்டு பாவாடையை அணிந்திருந்தாள்...!! அவளின் வதனத்தை ரசித்துக் கொண்டிருந்தவனின் ரசிப்பு பழனியில் பேச்சில் நின்றது..!!!
"ஏய் என்ன டி இது கோலம்..."
"என்னமா நல்லாத்தானே இருக்கேன்"
"என்னது நல்ல இருக்கையா?? அடியே உனக்கு கல்யாணம் ஆயிருச்சு டி.. இன்னமும் பாவாடை சட்டை போட்டுட்டு சுத்திட்டு இருக்க..யாராவது பார்த்தா என்ன ஆகறது.." என்ற பழனியிடம்