"என்ன பார்த்தி. ரொம்ப சந்தோஷமா இருக்க. போல.. பரவல்லை இரு.. ஆனா இதுவும் இன்னையோட கடைசியா இருக்கணும். இனிமே அவன் கூட நீ பேச வேண்டாம்..." என மிரட்டியவனிடம்
"என் அம்மா, அப்பாகிட்ட, என் தம்பிக் கிட்ட. என் அக்கா பொண்ணுங்க கிட்ட... ஏன் என் ஊருக்காரங்ககிட்ட கூட இரண்டு நிமிஷத்துக்கு மேல பேச விட்டது இல்லை நீ. நான் அதிகம் பேசறது இப்ப எனக்குன்னு இருக்கற சபரிக்கிட்ட மட்டும் தான். அதையும் இப்படி சொன்னா நான் என்ன பண்ணுவேன் கவி, என்னை எதுவென பண்ணிக்கோ, அவனை எதுவும் பண்ணிடாத ..." என தன் இயலாமையை வெளிப்படுத்தியது பார்த்தியின் குரல்
"அதான் நானும் சொல்றேன் மச்சா.. அந்த ஒரு பிரன்ட் நானா மட்டும் தான் இருக்கணும். முதல்ல இருந்து எனக்கு பிரன்ட் நீ மட்டும் தான். நீ எப்படி டா அவனை பிரன்ட் நினைக்கலா.. நானும் உனக்கு உண்மையான பிரன்ட்டா தானே இருக்கே. ஏன் டா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்ற.. என்னை விட அவன் உனக்கு முக்கியமானவனா போயிட்டான்னா.. அப்போ நான் யாரு டா உனக்கு. நீ ஏன் டா எப்பவும் போல என்கூட பேச மட்ற..." எனப் போனில் கேட்டவனின் குரலைக் கூடக் கேட்க பிடிக்காதவன் போல் முகத்தை வைத்திருந்தான் பூபதி பார்த்திபன்.
அவனின் கெஞ்சல் எல்லாம் சில நிமிடங்களுக்கு மட்டுமே மீண்டும் அவனின் அரக்க குரலில் "இப்படி பண்ண உனக்கு தண்டனை தர வேண்டாமா. கண்டிப்பா கொடுக்கணும்...." என்றவன் சிறிது அமைதிக்கு பின் "எனக்கு இன்னோரு ஆப் வேணும் அதுவும் ஒரு மணி நேரத்தில வேணும். நீ அதை பண்ணலைன்னா நான் சொல்ற பொண்ண நீயுட்டா மாத்தி கொடு..." என மூர்க்கத்தனமாக கூற
"சத்தியமா இன்னொரு ஆப், ரெடி பண்ணி தர முடியாது. அது ரொம்ப ரிஸ்க் புரிஞ்ச்சுக்கோ.. கண்டிப்பா முடியாது..." என பூபதி அவரசமாகக் கூற அதெல்லாம் காதில் வாங்கி கொள்ளதவன்
"ஒஹ் அப்படியா.. உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன் பூபதி, நம்ம பிருந்தாவைப் பார்த்து ரொம்ப நாள் ஆகுது. நான் வேணாப் போயி பார்த்துட்டு அவளுக்கு பண்றத பண்ணிட்டு வரட்டுமா..." என அவன் மிரட்டும் தோனியில் கூற