கொஞ்சிடும் காட்டு குருவிகளின்
சத்தமும்..வண்ண மயில்களின் திருட்டு தனமும்
அருவியாய் நீரை கொட்டிடும் பம்பு செட்டுகளும்....
அதில் குட்டி மீன்களாய் துள்ளி விளையாடும் குழந்தைகளும்..
வாய்க்கால் போல் ஓடும் வயல்வரப்புகளும்...
காற்றின் போக்கில் தலையை ஆட்டும் பச்சைப் பசையேன நெல்வயல்களின்
வயல்வெளிகளை காண காண சலிக்கவில்லை அவனிற்கு அதன் அழகை ரசித்தவாறே தூரத்தில் இருந்தவனை பார்த்தான்.தூரத்தில் வயல் காட்டில் பாத்திக் கட்டிக் கொண்டிருந்த பார்த்தியை பார்த்தவன் "இவனை வைச்சு அவனை கண்டு பிடிக்கலாம்னு பார்த்தா இவன் மூலம் ஒன்னும் தெரியல இவன் பிரன்ட் ஒருத்தன் வரான். அவனை பிடிச்சாலும் அசைஞ்சு கொடுத்து வர மாட்டேன்னு சொல்றான். பேசமா பூவிழியை வைச்சு ஏதாவது பண்ணலாம்னு நினைச்சா என் மனசு கேட்க மாட்டேன்னு சொல்லுது..." என புலம்பியவாறே தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்தப் பார்த்தியைப் பார்க்க அவனோ அங்கில்லாமல் இருந்தான்.
"ஐயோ எங்க போனான்னு தெரியலயே இவனையே பாலோவ் பண்ணிட்டு இருந்தா என் பொழப்பு நாறி போயிடும் இன்னைக்கு இவனுக்கு ஏதாவது பியுள் ஸ்டாப் வைச்சு அடுத்தது கண்டு பிடிச்சு அவனை ஏதாவது பண்ணணும்..." என நினைத்தவன் அவனை தேடி சென்றான்.
************
ஆரம்பத்தில் தீரனைப் பார்த்த நாள் முதல் அவனின் மேல் காதல் கொண்ட பாவையின் மனம் அவனின் அன்றைய கேவலமானப் பேச்சை விசாரிப்புகளை முழுவதும் மறைந்து இருந்தது. ஆனால் அதை நினைவூட்டும் சமயமும் இன்றே வரும் என அவள் நினைத்து இருக்க மாட்டாள்.
சோபாவில் அமர்ந்திருந்த மகேஷின் அருகில் அமர்ந்த பூவிழியை முறைத்தவாறே அமர்ந்திருந்தாள் இழையினி.
"மாமா...என்ன மாமா இவ்ளோப் புகைய இருக்கு. ஏதோ கருகன வாசம் வேற வருது உங்களுக்கு ஏதாவது தோணுதா..." எனக் கேட்டவளைப் பார்த்தவன்