ஏய், என் தலைக்கேறுற
பொன் தடம் போடுற
என் உயிர் ஆடுற...
என்னடி மாயாவி நீ..!!!
என் நெலம் மாத்துற...
அந்தரமாக்குற...
என் நெஞ்சம் காட்டுற..!!!
பட்டா கத்தி தூக்கி
இப்போ மிட்டாய் நறுக்குற.
விட்டா நெஞ்ச வாரி
உன் பட்டா கிறுக்குற...!!!
ஏய், என் தலைக்கேறுற
பொன் தடம் போடுற
என் உயிர் ஆடுற
என்னடி மாயாவி நீ
என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நெஞ்சம் காட்டுற.
வண்டா சுத்தம் காத்து
என்ன ரெண்டா உடைக்குதே
சும்மா நின்ன காதல்
உள்ள நண்டா துளைக்குதே
தெனம் கொட்டி தீக்கவா
ஒரு முட்டாள் மேகமா
உன்ன சுத்தி வாழவா
உன்ன கோட்டா காகமா......
சித் ஸ்ரீராமின் காந்த குரலில் மென்மையாக பாடலின் வரிகள் ஒலிக்க அதை மெய் மறந்துக் கேட்டு கொண்டிருந்தவனைக் தட்டி எழுப்பினான் மகேஷின் உயிர் நண்பன் இழையின் உடன்பிறவா சகோதரன் கோபிலன் என்கிற மித்திரன்.. கோபிலன் என்பது இழை வைத்த பெயர்... அவனை ஓட்டுவதற்காக வைத்தாள்.. நாளடைவில் அதனை வைத்து அனைவரும் அழைக்க அதில் மிகவும் கடுப்பாவது நம் கோபி தான்... சாரி மித்திரன் தான்.. ( உங்களுக்கு என்ன நேம் புடிக்குதோ அதை வைச்சுகொங்கப்பா)... இருபத்தி ஐந்து வயது இளைஞன். ஆண்களுக்கான மிடுக்குடன் இருப்பவன், ஆறு அடியிற்கும் மேல் சற்று உயரம் அதிகம்... என்றும் முகத்தில் ஒரு மென்மையை சுமந்திருப்பான்...!!! ஒரு வருடத்திற்கு முன் விபத்தில் தாய், தந்தையை இழந்தவனுக்கு பழனியே மற்றொரு தாய்...!! இழையின் சீனியர் என்ற முறையில் அறைமுகமானவன்... நாளைடவில் இழையின் அண்ணனாக வலம் வர...இவனையும் அழகானவன் என நினைத்து இவன் பின்னால் பல பெண்களும் வலம் வர அதை கண்டும் காணாமல் இருக்கும் ஆணழகன்....(( எல்லாம் நேரம்🤦🤦🤦🤦))))