வணக்கம் நண்பர்களே...😢😢😢
என் கதையின் போக்கிற்காக மட்டுமே ஒரு சில கதாப்பாத்திரங்களை அறிமுக படுத்தினேன்...😕😕😕 அவர்களையும், அவர்களின் காதலையும் கதையின் போக்கில் காணலாம்...😳😳 தயவுசெய்து யாரும் குழப்பி கொள்ள வேண்டாம்.. 😕😕 என் கதை முடியும் தருணமில்லை😖😖😖 அதனால் நான் அறிமுகம் செய்த அனைத்து கதாப்பாத்திரங்களையும் ஏன் செய்தேன் என அதிமுக்கியமான கேள்வியை கேட்கவேண்டாம் மக்களே. 😭😭 சத்தியமா பதில் சொல்ல தெரியலை(மீ பாவம்) கதையின் போக்கில் அந்த கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் புரியும்.. அதேபோல் என் கதையில் சிலபல ட்விஸ்ட்களையும் வைத்திருக்கிறேன்...அதையும் ஏன் வைத்தாய் என்று கேட்டால் அதுக்கு பதில் இல்லை ( நான் இன்னும் அதை யோசிக்கவே இல்லை...)) இன்றுடன் என் கதையில் போக்கு வெகுவாக மாறும் குழப்பங்கள் இருந்தாலும் பொறுமையாக படித்தால் மிக்க நல்லது.. ))))) நன்றி வணக்கம்.😍
********
காற்றிலாடும் மூங்கிலின் ஓசை சில நிமிடங்களிலே மறைவது போல தன்னவளின் நினைவு அடிக்கடி வந்து மறைந்ததுமுண்டு..அதை அவனும் வெளி காட்டிக் கொண்டதில்லை..!!
அன்று சென்று தன்னவளின் இதழை சுவைத்ததோடு வந்தவன் தான் இதுநாள் வரை அவளைக் காணக்கூட இல்லை.. உரிமையுள்ளவன் தான் ஆனாலும் தன்னவள் நினைவில்லாமல் அன்று தன் கோபத்தில் செய்தது தவறென எண்ணியவன் கூசிப்போனான்..!! அன்று முதலே தன்னவளை காணவும் முடியாமல், காணாமல் இருக்கவும் முடியாமல், தவிக்கிறான் அவளின் மாயவன்.. ஆனாலும் இன்றுவரை தவறாமல் தன்னவளை பற்றி அவளின் தோழி மூலம் விசாரித்து தெரிந்துகொண்டான்...
**
எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்குமிடம்.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறும் கட்டிடங்களே..
பல அடுக்கு மாடி வீடுகள் இல்லையென்றாலும் அந்த ஏரியா முழுவதும் கான்கிரீடிலான ஒரு அடிக்கு மாடி வீடுகளே..மாலை வேளை என்பதால் சிறுவர்களின் கலகலப்பு அங்கிருந்த மொட்டை மாடிகளில் தெளிவாக கேட்டது...!!! அதையெல்லாம் தன் பால்கனியிலிருந்து பார்த்து கொண்டிருந்தவனின் நினைவில் தன்னவள் சொல்லாமல் கொள்ளாமல் வந்தாள்..