அவன் 37

268 13 1
                                    

வாகனங்களின் இரைச்சல் அதிகமாக கேட்காதளவிற்கு தன் வீட்டின் கதவுகளை இறுக சாத்தியவர்  வீட்டிற்கு நுழைய தன் மகளின் செய்கையில் அதிர்ந்து

"பிருந்தா மா. எப்போ டா எழுந்த.  அப்பா வந்து இருப்பேன்ல நீயே ஏம்மா இதெல்லாம் பண்ற. வீட்டுல காய்கறி இல்லைன்னு வாங்கிட்டு வரதுக்குள்ள நீ எழுந்து கிச்சனுக்கு வந்துட்ட..." என்றவாறே கிச்சனில் இருந்த தன் மகள் பிருந்தாவை பதட்டத்துடன் கேட்க

அவரைப் பார்த்து சிரித்தவள் "அப்பா நீங்க ஒருத்தரா எத்தனை வேலை தான் பாப்பீங்க. இப்போ தான் நான் கொஞ்சம் நல்லா நடக்கிறேன். கை கூட இப்போ நல்லா இருக்கு இனி நீங்க ஏன் பா.. அவசத்தைப் படனும். அதான் பா..கொஞ்சம் கொஞ்சம் உங்களுக்கு ஹெல்ப் பன்றேன்..." எனக் கூறிய மகளை சிரிப்புடன் பார்த்தார் கணேசன்.

((((...பிருந்தாவின் அப்பா.. கணேசன் நேர்மையான தாலுக்கா ஆபீசர். பிருந்தாவின் தற்கொலைக்கு பின் அவளை பார்த்துக் கொள்ள நர்ஸ் வைத்து இருந்தாலும் தன் மகளிற்கு  உறுதுணையாக இருந்தார். இதுநாள் வரை தன் மகளின் தற்கொலைக்கு காரணம் அறிந்தும் அவளிடம் ஒரு வார்த்தைக் கேட்டது இல்லை அவர்.

பிருந்தாவின் இருபதாம் வயதில் அவளின் தாய் உடல்நிலை குறைவால்  இறந்து விட அவரின் இழப்பால்  இருவரும் மனதளவில் சோர்ந்து தான் போனார்கள். அவர்களின் மனநிலையை முழுவதும் மாற்றியவன் தீரன் தான். ஆம் தீரன் தான், பிறப்பால் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தாலும் அனாதைப் போல் வளர்ந்தவன்,
சிறு வயதிலேயே பாசத்திற்கு ஏங்கி நின்றவனை தாய்ப் போல் பாசம் காட்டியது அவனின் சிறு வயது தோழி பிருந்தா தான்.  என்னதான் இருவரும் ஒரு வயது வித்தியாசம் இருந்தாலும் அண்ணன் தங்கை உறவு மீறி நடந்துக் கொண்டது இல்லை.. அழைக்கும் விதம் வேறாக  இருந்தாலும் இருவரும் பழகியது உடன்பிறந்தவர்கள் போல் தான். அவன் வீடும் இவள் வீடும் எதிர் வீடு என்பதால் அதிகம் இங்கு தான் இருப்பான் தீரனும். அவனின் குடும்பத்தில் இவனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதால் இவன் எங்கு சென்றாலும் அவர்கள் இவனை தேடியது இல்லை. அவர்களின் இந்த ஒதுக்கமே தீரனின் ஆழ்மனதில் பதிந்து போனது அவன் அனாதை என்னும் சொல். அதனால் என்னவோ அடிக்கடி அவன்  அனாதை எனக் கூறிக்கொள்வான்.

மாயவனோ... தூயவனோ....நாயகனோWhere stories live. Discover now