"உன் தங்கச்சி மரியாதை பலமா தரா டா.. கீழே வைட்டா ஏதோ வெச்சுருப்பா நான் போயிட்டு வரேன்" என மகேஷ் கூற
தலையில் அடித்து கொண்டே "போய் தொலை..." என கூறியவன் தன் உடைந்து போன மொபைலை பாவமாக பார்த்தான்
"டேய்ய்....." என மீண்டும் இழை கத்தவும் அரக்க பறக்க ஓடினான் மகேஷ்.."இவ கிளம்பறதுக்குள்ள என்னை ஒரு வழி ஆக்கிடுவா போல இப்போ என்னன்னு தெரியலயே கடவுளே..." என மனதில் நினைத்தாலும் வெளியில் கெத்தாக தான் நடந்து வந்தான்..
மேல் அறையிலிருந்து வருபவனை கண்களால் அளவிட்டாள் அவனின் வினியாள்...(இழையினியாள்)
ஆறடிக்கு சற்று அதிகம்.. கலைந்த அடர்த்தியான கேசம்.. கூரிய நாசி, அழகிய கண்களின் நிமிர்ந்த பார்வை. மேல் உதட்டை பாதியாக மறைக்கும் அவனின் மீசை.. கடிக்க தோன்றும் செவ்விதழ்கள்.. கன்னத்தில் முழுவதும் பாதியாக வெட்டப்பட்டு தாடையில் கொஞ்சம் அதிகமாக வளர்ந்திருந்த தாடி..!! சற்றே திடமான அகலமான மார்பு..ஆறு பைகள் கூட வைத்து இருந்தான்..அதான் பா சிக்ஸ்பேக்..கம்பீரமான நடை.. மாடியிலிருந்து நடந்து வரும் அழகோ தனி அழகு.. சிறு வயதிலிருந்து கரடி பொம்மை போல் இருந்தவன் இன்று ஒரு கம்பீரமான ஆண்மகனாய் தெரிந்தான் இழையினிக்கு... நம்ம கல்யாணத்தில கூட மீசை இல்லாம, தாடி இல்லாம பார்க்க கொஞ்சம் சின்னவன் மாதிரி தானே இருந்தான்.. ஆனா இந்த இரண்டு வருஷத்துல இவ்வளவு மாறிட்டானா இவன்.. இல்லை எனக்கு தான் அழகா தெரியறனா.. என் அச்சு குட்டி டா நீ, என் அழகு கரடி குட்டி..என் கன்னுக்குட்டி, என் செல்லம்.. எவ்ளோ அழகு .." என அவனை வர்ணிக்க தொடங்கிய மனதையும் அவனை விழுங்கும் பார்வையும் ஒரு நிமிடத்தில் மாற்றினாள்..!! எவ்வளவு தான் அவளின் மனம் அவன்பாள் சாய்ந்தாலும் அவளின் மூளை இன்றும் அவனை குறை கூறிக்கொண்டே இருந்தது... சில சமயம் கண்ணில் காதலுடன் காண்பவள், சில சமயம் வெறுப்பையும் சுமந்தாள் இழையினி...
"ஏய் குந்தாணி எதுக்கு வர சொன்ன.. உயிர் போற மாதிரி எதுக்கு டி இப்படி கத்தற..." என மகேஷ் கேட்டவுடன் தான்! எதற்காக அழைத்தோம் என நினைவு வர "யாரோ வாணியாம் கூப்பிட்டு இருக்காங்க.. பேசு..." என போனைக் காட்டிட "அட நம்ம கொக்கி" எனக் கத்தி குதூகலத்துடன் சொன்னவனை முறைத்தாள் இழையினி..