"பொறுக்கி நாயேக் கூடயே இருந்துட்டு இப்படி ஒரு துரோகம் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை டா... ச்சே... ஏன் டா ஏன் இப்படி பண்ண. உன்னை ஒவ்வொரு நிமிஷமும் என் உயிர் தோழனா நினைச்சேனே பாவி. ஏன் டா இப்படி பண்ண சொல்லு டா...
வெள்ளை கோர்ட் போட்டுட்டு அதுக்கு துரோகம் பண்ணிட்டு இருக்கியே நீ நல்லா இருப்பியா டா.. நாயே.. உன்னை உள்ள தூக்கிப் போட்டு மொத்து மொத்துன்னு மொத்தானா கூட என் வெறி தீராது டா மித்தரா.. ச்சே நீ இப்படி இருப்பன்னு நினைக்கவே இல்லை டா.. எப்படி டா இப்படியெல்லா பண்ண தோணுது. அதுவும் என்னைவிட்டுட்டு எப்படி டா பிரியாணி சாப்பிட தோணுது. சொல்லு டா சொல்லு. டாக்டர் யாரும் சிக்கன் சிக்ஸ்டிப்பை எல்லா சாப்பிட மாட்டங்க. நீ ஏன் டா இப்படி டாக்டர் தொழிலுக்கே துரோகம் பண்ற. துரோகி..!! என்னை விட்டுட்டு எப்படி டா சாப்பிட முடிஞ்சது உன்னால சொல்லு டா சொல்லு.. ஏன் டா இப்படி பண்ண சொல்லு சொல்லு.." என சிக்கன் பிரியாணியை தனியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தான் மகேஷ்.
ஒருக் கையில் முட்டை, ஒருக் கையில் லெக்பீஸ் வைத்துக்கொண்டே மகேஸை முறைத்தவன்
லெக்பீஸை கடித்தவாறே "நீ பேசத டா பச்சை துரோகி.. என்னை வைச்சுட்டே இரண்டும் பேரும் லைவ் சோ காமிச்சுட்டு இருக்கீங்க. ஒரு வயசு பையன் கூடவே இருக்கானே, அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்துக் கட்டிக்கொடுக்கலாம், இல்லை லவ்காவது செட் பண்ணிவிடலாம்னு உனக்காவது தோணுதா. நீ பாட்டுக்கு உன் பொண்டாட்டிக் கூட ஜாலியா இருக்க.
அதான் நானும் பிரியாணி ஆர்டர் பண்ணி என்னோட தனிமையை போக்கிட்டு இருக்கேன். என்ன பண்றது சிங்களா சுத்தற எல்லாரும் இப்படி தின்னுத் தின்னு தான் கோபத்தைக் குறைச்சுக்கணும்..." என லெக்பீஸை கடித்துக் கொண்டேக் கூறியவனை முறைத்தவன்"சமூகத்தைப் பாத்து லவ் பண்ணனும் நினைக்கற உனக்கு. இந்த ஜென்மத்தில பொண்ணு கிடைக்காது டா. அதே மாதிரி ஒரு பொண்ணை கரெட் பண்ண துப்பில்லாத நீ, இந்த பிரியாணியை சாப்பிடக் கூடாது. எங்கிட்ட கொடு.." என அவனிடமிருந்த பக்கெட்டைப் பிடிங்கியவன் சாப்பிடத் தொடங்கினான்" மகேஷ் கூறிய வார்த்தைக்களை கேட்டவனிற்கு பக்கென்றானது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்