மாயவன் 27

762 33 13
                                    

நெஞ்சோடு கலந்திடு உறவாலே...
காயங்கள் மறந்திடு அன்பே...நிலவோடு தென்றாலும் வரும் வேளை.. என பாடிக் கொண்டிருந்தவளின் நினைவில் தன்னவனை முதன்முதலில் பார்த்தது ஞாபகம் வர அன்றைய நினைவில் முழிக்கினாள் நித்தியமதி.

"எவனையோ ஒருத்தனைக் கூட்டிட்டு வந்து இருக்களா இந்த இழையினி.." எனக் கூறிய அன்னபூரணியிடம்

"நானும் தான் அக்கா பார்த்தேன். எவனைன்னு தெரியல அக்கா. நல்லா வாட்ட சாட்டமா தான் இருந்தா.. பேரு என்னமோ சொன்னாங்க மித்ரனோ, கித்ரனோ. அம்மா,அப்பா இல்லையாமா. ஒரே பையன் சொத்து நிறைய இருக்கு போல. இவனும் இவக் கூட தான் டாக்டர்க்கு தான் படிச்சுட்டு இருக்கானாம். அதான் இழுத்துட்டு வந்துட்டா போல. என்ன ஜாதியோ, என்ன கொலமோ தெரில அக்கா.. என்னமோ போங்க. நம்ம பசங்களை  விட்டா போதும்..." என நித்யாவின் அன்னை, அன்னபூரணியிடம் (மகேஷ் அம்மா) கூறயதைக் கேட்டவளிற்கு கோபம் தான் வந்தது..

"மா... பெரியம்மா, நம்ம இழை அப்படி எல்லாம் பண்ண மாட்டான்னு தெரிஞ்சும் இப்படி பேச உங்களுக்கே நாக்கு கூசல. நானும் ஒரு பொண்ணு தான் மா. அப்ப நான் என் நண்பன்னு ஒருத்தனைக் கூட்டீட்டு வந்தா நீங்க இப்படி தான் சொல்லுவீங்களா மா.. சொல்லுங்க பெரியம்மா இப்படி தான் சொல்லுவீங்களா..." எனக் கேட்டவளிடம்

"இப்போ பெரியவங்க நாங்க பேசிட்டு இருக்கும் போது சின்னவ உனக்கு என்ன டி இங்க வேலை. ஒழுங்கா உன் வேலையை பாரு..." என கூறிய தன் அன்னையை முறைத்தவள்

'உங்களை எல்லாம் திருத்த முடியாது...' என மனதில் நினைத்தவள் "நான் அண்ணாவை போயி பார்த்துட்டு வரேன்..." எனக் கூறியவள் வேக வேகமாக தன் அண்ணனின் வீட்டிற்குள் செல்ல மகேஷின் அறையில் இரு ஆண்களின் பேச்சு சத்தம் நன்றாகவே கேட்டது அதில் ஒன்று தன் அண்ணனின் குரல் மற்றோரு குரல் யாரென்ற குழப்பத்துடன்  அறைக்குள் செல்லாமல் வெளியே நின்றிருந்தாள் நித்யா..

"இது தான் உங்க வீடா மகேஸ். நல்லா இருக்கு. என்னை பார்த்ததும் உனக்கு அடையாளம் தெரிஞ்சது எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீ அப்போ ஒன்பதாவது தானே படிச்ச. அப்போ ரொம்ப குட்டியா இருந்த. இப்போ பாக்க ஆளே மாறி இருக்க. எனக்கு கூட உன்னை அடையாளம் தெரியல. நீ கண்டு பிடிச்சு பேசனது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆமா இழை உனக்கு என்ன சொந்தமா..." எனக் கேட்டவனிடம்

மாயவனோ... தூயவனோ....நாயகனோWhere stories live. Discover now