"ட்ரைனிங்ன்னு கூட்டிட்டு வந்துட்டு என்னை கொடுமை பண்றாங்க... நான் ஒருத்தியா இருந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்... ஆனா இந்த பிரியா பீடை அண்ணா கூட ஜாலியா இருக்கா. நான் மட்டும் தனியா சிங்கிளா இருக்கேன்.. இந்த எருமை (மகேஷ்) எப்ப போறான்.. எப்ப வரான்னு தெரியல.. அந்த எருமை(மித்திரன்) நைட் எல்லாம் வீட்டில இல்லாமல் காணாம போயிடுது.. காலையில கேட்டா ஹாஸ்பிடல இருக்கேன்னு சொல்லுது..!! இவ்வளவு பெரிய வீட்டில நான் மட்டும் தனியா இருக்கற மாதிரி இருக்கு.. எதாவது தோட்டம் மாதிரி இருந்தா கூட பரவாயில்ல இங்க எல்லாம் வெறும் கட்டிடமா இருக்கு... ஓ மை குப்புசாமி நீ தான் எனக்கு துணை' வாய்விட்டு வேண்டியவள் படுக்கையில் விழ..
"அடியேய் எங்க டி இருக்கவ.. ஏய்யய்ய..தலையினி..என்ன டி வீட்டுல இருக்கியா இல்லையா.." என தன்னவன் கத்தும் சத்தம் கேட்க எழுந்து செல்வதற்குள் பாடலை பாட விட்டான் மகேஷ்..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
நீயா ஒன்னு தாறியா.. இல்ல மோதி பாக்க போறியா...
என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே..."இல்லை இல்லை வடிவேலு சார்.. இவ என்னை அன்னைக்கு பக்கத்தில கூட விடலை.." என வடிவேலிற்கு பதில் சொன்ன விதமே கூறியது அவனும் வடிவேலுவை போல் தான் வந்திருக்கிறான் என ...!!
தன்னவன் கத்தலில் படுக்கையில் இருந்து எழுந்தவள் தன் அறையிலிருந்தே "டேய் நாயே...எருமை...என்னைப் பிடிச்ச பீடை... உனக்கு குடிக்கிற பழக்கம் வேற இருக்கா.. இன்னும் எத்தனை கெட்ட பழக்கம் எல்லாம் இருக்கு சொல்லு.. உன்னை காதலிச்ச பாவத்துக்கு இதெல்லாம் சலிச்சுட்டு போவேன்னு மட்டும் நினைக்காத டா ரசத்தில வேஷம் வெச்சு கொடுத்துருவேன்.. என இழை கத்திக்கொண்டே வர
"ஏன் எது வேஷம்.. எது ரசம்னு கண்டு பிடிக்க முடியாதுன்னு ரசத்தில வேஷம் வைக்கறயா..!!! சும்மாவே தண்ணியை சூடு பண்ணி கொடு டி நீ வைச்சா அதுவே எனக்கு வேஷம் தான்" என கூறியவனை மூக்கு முட்ட முறைத்தாள் இழை...