"என்ன டா இது கோவில் திருவிழான்னு கூட்டிட்டு வந்த. ஆனா இங்க ஒரு பிகரைக் கூட காணோம்..."எனக் கொஞ்சும் தமிழ் கேட்ட தன் நண்பனிடம் "டேய் இந்த டைம்ல எல்லாம் வர மாட்டாங்க டா. இப்போ வீட்டுல இருப்பாளுங்க நைட் ஆயிட்டா வருவாங்க பாரு.. அப்படி இருக்கும்..." எனக் கூறியவனை இடையிட்டான் சபரி
"அப்படியே எங்க ஊரு பொண்ணுங்களப் பாரு .. செத்துருவ.." என சபரிக் கூற அவனின் தலையில் அடித்த பார்த்தி
"டேய் கவி.. இப்போ எல்லாம் வீட்டுல வர சொந்தக்காரங்களுக்கு விருந்து போயிட்டு இருக்கும் இப்போ யாரும் வர மாட்டாங்க. நைட் விளக்கு மாவு எடுத்துட்டு வரும் போது நிறைய கூட்டமா இருக்கும் என்ற நண்பனிடம்
"என்னமோ சொல்றீங்க.. நானும் கேட்கற.. பட் ஐ ஸ்டீல் வைய்டிங் பார் தட் மூமெண்ட்..." என சொன்ன கவியின் அருகில் வந்த சபரி"ஏன் மேன் உனக்கு ஒரு பொண்ணு போதும் தானே.. அதென்ன எல்லாப் பொண்ணுங்களையும் சைட் அடிக்கறது. வெரி பேட் மேன் நீ.." என்ற சபரியை இருவரும் சேர்ந்து முறைத்தனர்.
"என்ன டா இப்படி முறைச்சுட்டு நீக்கறீங்க..."
"இங்க பாரு சபரி.. இவன் அப்படிப்பட்டவன் இல்லை.. மும்பையில வளந்தவன் நம்ம ஊரு கல்சர், நோம்பு எப்படி இருக்கும்னு இவனுக்கு தெரியாது. இதெல்லாம் இவன் பாத்தது இல்லை. அதுக்காக தான் அப்படி சொன்னான். நீ ஏதும் மைன் பண்ணிக்க வேண்டாம்.." எனக் கூறிய பார்த்தி கவியை அழைத்து சென்றான்.
"என்ன சொல்லிட்டோம்னு இப்படி முறுக்கிட்டு போறான்..." என தன் தோளைக் குலுக்கிக் கொண்டவன் அவர்களின் பின்னாலே சென்றான்.
********
"பெரிய அத்தான்... மகேஷ் எங்க காணோம்.." என்றவாறே வந்து நின்றவளை கண் இமைக்காமல் பார்த்தான் கவின்.
"தெரிலயே குட்டி... இங்க தான் எங்காவது இருப்பான்.." என பார்த்தி கூற சிரித்தவாறே தலையை ஆட்டியவள் தன் பட்டு தாவணியை கையில் பிடித்தவாறே தன் தோழி பிரியாவுடன் மெல்ல நடந்தாள்.
"கார்ஜ்ஜியஸ்.. இந்த ஊருல இப்படி ஒரு பொண்ணா.."என வாய்விட்டே கேட்டு விட்டான் பார்த்தியின் நண்பன் கவின்.