மாயவன் 24

452 32 20
                                    

பின்னால் இருந்து அணைத்தவளின் கையை பிரித்து விட்டவன்..
"இங்க பாரு டி இப்படி வந்து கட்டிப் பிடிக்கற வேலையெல்லம் வைச்சுக்காத சொல்லிட்டேன்.. உன்மேல நான் ரொம்ப கோபம்.. ஒழுங்கா போயிடு என் முன்னாடி நிக்காதா.. நல்லவன்னு தெரிஞ்சே  திட்டுவாளம். நாங்க சரி டி சொல்லிட்டு ஏத்துக்க வேணுமாம். இந்த லட்சணத்துல சின்ன வயசுல இருந்து லவ் வேற பண்றலாம் ஓடியே போயிடு. அப்படி இருக்கறவ முன்னாடியே நான் தப்பு பண்ணலைன்னு நம்பி இருக்கனும். இது நான் இல்லைன்னு அப்போ நம்பிக்கை இல்லாம இருந்துட்டு இப்போ வந்து தழும்பு உனக்கு இருக்கு.. அவனுக்கு இல்லைனு சொல்லற.. யார்க்கிட்ட போ டி.. இத்தனை நாள் கேட்டவன்னு  நினைச்சுட்டு இருந்த மாதிரியே நினைச்சுக்கோ.. ஐ ஹேட் யூ.. பக்கி பயபுல்ல கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி பால்கனியில இருந்து கீழ தள்ளிவிட்டு கொலைப் பண்ண பாத்தாவ தானே நீ .. பெரிசா பேச வந்துட்டா குந்தாணி..! இனிமே மகேஷ்,  பூதின்னு கூப்பிடு டி உனக்கு இருக்கு..." என கூறி முன்னேறி நடந்தவனை மடக்கி பிடித்தவள்..

"என்ன டா ஓவரா பண்ற.. நான் தான் சொல்றேன்ல எனக்கு முதல்ல தெரியல.. அதுக்கு அப்பறம் தான் அந்த போட்டோவை நல்லா பார்த்தேன்னு.. உண்மை தான் சின்ன வயசுல இருந்தே உன்னை பார்த்துட்டு இருந்ததுனல எனக்கு அந்த தழும்பு இருக்கறது ஞாபகம் வந்துச்சு." என கூறியவளை இடையில் மடக்கியவன்.

"என்ன சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு இருக்கறவன தான்  நம்பிக்கையே இல்லாம நம்ம  கல்யாணத்துல  கேவலமா பேசனயா.."என கூறியவனை முறைத்தவள்

"ரண்டு நாளைக்கு முன்னாடி எங்கிட்ட கேவலமா பேசி நியூட் போட்டோ கேட்டவனை எப்படி டா கல்யாணம் பண்ண முடியும்..!  அதான் அன்னைக்கு அப்படி பேசன..அதுவும்  உன்னால ஒரு பொண்ணு வாழ்க்கை பாழாப் போயிடக் கூடாதுன்னு தான் அப்படி உன்னை பேசன..!! ஆனா அன்னைக்கு அம்மவோட  பிடிவாதத்துல உன்னை கல்யாணம் பண்ற மாதிரி ஆயிருச்சு.. கல்யாணம் பண்ணா என்ன பிரிஞ்சு போயிடாலம்னு தான் உன்கிட்ட இருந்து விலகிப் போனேன்..!! அது தான் சின்ன விஷயத்துக்கு  கூட உங்கிட்ட சண்டைப் போட்டேன்.. ஆனா நீ அடுத்த நாளே ஊருக்கு போயிட்ட..!!  நானும் கோவை போயிட்டேன்.. அப்போ தான் டா என் பழையப் போனை கையில எடுத்தேன். அந்த போட்டோவை மறுபடியும் பார்த்தேன்.. நல்லா பார்த்தேன்.. இதோ உன் கழுத்துக்கு கீழ இருக்கற என்னோட பல் தழும்பு இல்லாம இருந்துச்சு.. சின்ன வயசுல உன்னை இங்க தானே ரத்தம் வர அளவுக்கு கடிச்சு வைச்சேன். அந்த தழும்பு மறைஞ்சு போயிருச்சோன்னு முதல்ல யோசிச்சேன்.. ஆனால் அந்த போட்டோவை பாக்க பாக்க தழும்பு இல்ல.... ஆனா இருக்கு அந்த தழும்பு உனக்குள்ள இருக்கும்னு நினைச்சேன்.. கான்பார்ம் பண்ண மறுபடியும் நம்ம வீட்டுக்கு போனேன். உன் போட்டோ எல்லாம் அலசினேன் ஒரு க்ளூ கூட கிடைக்கல.. இதுக்கு மேல என்ன டா பண்ண சொல்ற.. நீ இப்படி தான்னு மூளை பிக்ஸ் பண்ணாலும் மனசு கேட்கவே இல்லை, நீ பண்ணலைன்னு உறுதியா சொல்லுச்சு... கடைசியா நீ வர நாளுக்காக காத்திருக்க ஆரம்பிச்சேன்..!!

மாயவனோ... தூயவனோ....நாயகனோWhere stories live. Discover now