"என் பொண்டாட்டி எங்க மாமா.. தனியா தானே படுத்து இருக்கா.." எனக் கேட்க கொட்டாவி விட்டவாறே "ஆம்" எனத் தலையை ஆட்டி ஏதோ சொல்ல வர அதை கண்டுகொள்ளாமல் ஒரே ஜம்பில் சோபாவைத் தாண்டி அதற்கு அடுத்த தன்னவளின் அறைக்குள் சத்தமில்லாமல் சென்றவன் கதவை மூடும் முன் தன் மாமனைப் பார்த்து பறக்கும் முத்தத்தைக் கொடுத்துவிட்டு அறைக் கதவை தாழிட்டு திரும்பியவன் சிலிர்த்து நின்றான்.
"அடி ஆத்தி...." என நெஞ்சில் கை வைத்து தேய்த்து கொண்டவன் உறங்கி கொண்டிருந்த தன்னவளையே பார்த்தான்.
படுக்கையின் நுனியில் பட்டுப் போல் உறங்கி கொண்டிருந்தாள். அழகியப் பட்டு தாவணியில் இரவில் ஜொலிக்கும் நிலவு தேவதையாய் மின்னியவளின் பட்டு பாவாடை மூட்டிக் கால் வரை ஏறி இருந்தது, கைகளை இடுப்பில் வைத்தவாறே படுத்து இருந்தவளை கண் இமைக்காமல் பார்த்தனின் உடல் சிலிர்த்தது. 'கொஞ்சம் திரும்பிப் படுத்தாலும் கீழே விழுந்து கைகால்களை உடைத்துக் கொள்வது நிச்சியம்' என நினைத்தவன் அவளின் அருகில் சிரித்தவாறே சென்றான்.
அவளின் பாவாடையைக் கீழிறக்கி விட்டவன் அவளின் அருகில் படுத்து அவளை தன் மார்ப்போடு அணைத்துப் படுத்துக் கொண்டான். அவனின் பிடி அவளை மேலும் இறுக்கி கொண்டே போனது. ஏதோ அவளை தொலைத்து விடுவதுப் போல் அவளை இறுக்க அணைத்துக் கொண்டவனிற்கு உறக்கம் தான் வர மறுத்தது.
(ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவன் அல்லவா. அவளைவிட்டு பிரியப் போகிறோம் என்று தானே இல்லாத தில்லாலங்கடி, சொல்லாத பொய் என அனைத்தும் செய்து அவளைக் கரம் பிடித்தான். மூன்று வருடப் பிரிவில் அவளிற்கு வேறு யாருடனாவது திருமணம் நடந்து விட்டால் என்ன செய்வது என்ற ஒரே காரணத்திற்காக தெரிந்த ஜோசியரை வைத்து திட்டத்தை தீட்டினான்.
இழையினியின் விஷயத்தில் அவனின் காதல் சேர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை அவனிற்கு இல்லை. நீங்கள் கேட்கலாம் உன் காதலின் மேல் நம்பிக்கை இல்லையா என்று ஆம் இல்லை என்று தைரியமாக கூறுவான். ஏனென்றால் காதல் சிலருக்கு மட்டுமே வெற்றி எனும் கனியை அளிக்கும் மற்றவர்களுக்கு அது தீராத வலியை தான் தரும். அந்த வலி தரக்கூடிய காதலின் மேல் மகேஸிற்கு நம்பிக்கை இல்லை.