8 ஆதித்யாவின் முடிவு

2.8K 110 28
                                    

8 ஆதித்யாவின் முடிவு

மறுநாள் காலை

பூஜைக்கு படைக்க பாயசம் செய்ய வேண்டும் என்றவுடன், நான் செய்கிறேன் என்று சமையலறைக்கு சென்றாள் கமலி. எதையோ தீவிரமாக சிந்தித்தபடி பாயசத்தை கிளறிக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது,

"மா......மி" என்று கத்தி கொண்டே அவளை நோக்கி ஓடிவந்தாள் ஷாலினி.

அவளைப் பார்த்து சிரித்து விட்டு, அவள் சமையலறை மேடையின் மீது ஏறி அமர உதவினாள் கமலி.

"குட் மார்னிங் மாமி" என்றாள் ஷாலினி மேலே அமர்ந்தபடி.

"குட் மார்னிங்..."

"நீங்க எங்க வீட்டுக்கு வந்துட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்றாள் ஷாலினி.

"ஏன்?"

"எனக்கு கண்ணாமூச்சி விளையாட ஒரு ஆள் கிடைச்சுட்டாங்க இல்ல, அதுக்கு தான்."

"உனக்கு கண்ணாமூச்சி விளையாட பிடிக்குமா?" என்றாள் ஆர்வமாக கமலி.

"ரொம்ப பிடிக்கும். நம்ம விளையாடலாமா?"

"விளையாடலாமே..."

"ஃபிரண்ட்ஸ்?" என்று தன் கையை நீட்டினாள் ஷாலினி.

"ஃப்ரெண்ட்ஸ்" என்று அவள் கையைப் பற்றி குலுக்கினாள் கமலி உற்சாகமாக.

"நான் இங்க வரும் போது, நீங்க எதையோ யோசிக்கிட்டு இருந்தீங்களே, அது என்ன?"

"ஒன்னும் இல்ல..."

"ஏதோ இருக்கு... நீங்க என்னை என்ன வேணும்னாலும் கேக்கலாம். நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன்"

"நிஜமாவா?"

"ஆமாம். நம்ம தான் இப்போ ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோமே..."

மெல்ல அவளை நோக்கி குனிந்த கமலி,

"டேம் இட் னா என்ன?" என்றாள் ரகசியமாக.

அதைக் கேட்டு தன் விழிகளை பெரிதாக்கினாள் ஷாலினி. கமலியை எது அப்படி கேட்க வைத்தது என்று அவளுக்கு தெரியும். அவளுடைய மாமா உதிர்க்கும் பொன்னான வார்த்தைகளில் அதுவும் ஒன்றாயிற்றே...! அவன் கோபப்படும் போதும், எரிச்சல் அடைந்தாலும் அதை சரளமாய் கூறுவது வழக்கம். கமலியின் முன்னாள் அவன் அதை கூறியிருக்க வேண்டும். அதனால் தான் அவள் அதற்கு அர்த்தம் கேட்கிறாள். ஆனால் அதற்கு என்ன பதில் கூறுவது? அப்பொழுது சமையலறைக்குள் இந்திராணி வந்தார்.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now