59 பிரபாகரனின் உறுதி

2.4K 100 20
                                    

59 பிரபாகரனின் உறுதி

"நான் ரேணுகாவை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்" என்ற
பிரபாகரனின் வார்த்தை அங்கிருந்த அனைவரையும் திடுக்கிட செய்தது.

அவன் முகத்தை வெறித்துப் பார்த்தபடி அனைவரும் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு அனிச்சையாய் எழுந்து நின்றார்கள். பிரபாகரனின் கையை பிடித்து தனது அறைக்கு இழுத்துச் சென்றான் ஆதித்யா. தனது அறைக்குள் வந்த உடன் அவன் கையை கோபமாக உதறினான்.

"என்ன பேத்தல் இது?" என்றான் பொறுமை இழந்து.

 அமைதியாய் நின்றான் பிரபாகரன்.

"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா? அவங்க என்ன செஞ்சாங்கன்னு மறந்துடாதே. அவங்க ஒரு துரோகி. உன்னை மாதிரி ஒரு நல்லவனை கல்யாணம் பண்ணிக்க அவங்களுக்கு எந்த தகுதியும் இல்ல"

"யாரா இருந்தாலும் அவங்களுக்கு ரெண்டாவது சான்ஸ் கொடுக்கணும்..."

அவனது பேச்சைத் துண்டித்தது,

"நீ எதுக்காக இதெல்லாம் செய்யறேன்னு எனக்கு தெரியும்." என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்,

"நீ எனக்காக இதெல்லாம் செய்ய வேண்டாம் பிரபா"

"நான் ரேணுகாவுக்கு இரண்டாவது சான்ஸ் கொடுக்கிறதை பத்தி பேசல. எனக்கு கொடுக்கிறதை பத்தி பேசுறேன். நான் இதை உனக்காகவோ, ரேணுகாகவோ செய்யல. எனக்காக செய்யறேன்"

"நீ என்ன சொல்ற?"

"ஐ லவ் ரேணுகா"

"நீ என்ன பைத்தியமா? அவங்க என்ன எல்லாம் செஞ்சாங்கன்னு தெரிஞ்ச பிறகு உன்னால் எப்படி அவங்களை நேசிக்க முடிஞ்சிது?"

"நான் ரேணுகாவை புதுசா காதலிக்கல. ரொம்ப நாளா காதலிச்சிகிட்டு இருக்கேன்"

அதை கேட்ட ஆதித்யாவின் முகம் சுருங்கியது.

"ரேணுகா என்னை விட ஒரு வயசு பெரியவங்குறதால, அவகிட்ட என்னோட காதலை சொல்றதுல எனக்கு தயக்கம் இருந்தது. நான் தயங்கி நின்ன அந்த நேரத்துல, சரவணன் அவ வாழ்க்கையில் வந்துட்டான். அவ எனக்குன்னு பிறக்கலைன்னு நான் முடிவு பண்ணிட்டேன். ஆனா இப்போ அவளுக்கு நான் தேவை"

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now