57 தவறல்ல... துரோகம்

2.3K 108 19
                                    

57 தவறல்ல... துரோகம்

ஆதித்யாவின் வார்த்தைகளைக் கேட்டு உணர்வற்ற ஜடம் போல் நின்றாள் ரேணுகா. யாருக்காகவும் காத்திருக்க விரும்பாத இந்திராணி, ஷாலினியை தன் தோளில் தூக்கிக்கொண்டு தன் அறையை நோக்கி நடந்தார்.

"முத்து..." என்று வேலைக்காரனை அழைத்தார் பாட்டி.

"சொல்லுங்க பாட்டி" என்று ஓடி வந்தான் முத்து.

"அவ ரூமை கிளீன் பண்ணிட்டு சாவியை அவகிட்ட கொடு"

"சரிங்க பாட்டி"

ஷாலினியுடன் இருக்க அனைவரும் இந்திராணியின் அறைக்குச் சென்றார்கள், ரேணுகாவை விட்டுவிட்டு.

தான் மன்னிக்கப்பட போவதில்லை என்பது புரியாமல் இல்லை ரேணுகாவுக்கு. அவர்கள் மீது தவறும் இல்லை. அவள் செய்தது மன்னிக்க படக் கூடிய விஷயம் அல்லவே. கடந்த நாட்களில் பூட்டியே இருந்த அவளது அறையை சுத்தம் செய்த முத்து, அறையின் சாவியை அவளிடம் கொடுத்தான்.

இதற்கிடையில்,

தங்களது அறைக்கு வந்தாள் கமலி. தன் கை விரல்களை கோர்த்துக் கொண்டு தரையை வெறித்து பார்த்தபடி, சோபாவில் அமர்ந்திருந்தான் ஆதித்யா. அவனது தோளைத் தொட்ட கமலி,

"ஆதிஜி... " என்று அழைத்த போதும் அவன் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவனது முகத்தை உயர்த்திய கமலி, அவன் கண்கள் கலங்கி இருந்ததை பார்த்து பதட்டம் அடைந்தாள்.

"என்னை மன்னிச்சிடுங்க ஆதிஜி. அவங்களை இங்க அழைச்சுக்கிட்டு வந்து நான் உங்களை காயப்படுத்திட்டேன்..."

ஆனால் அவள் சிறிதும் எதிர்பார்க்காத வண்ணம் அவள் இடையை சுற்றி வளைத்து, அழுது அவளை பேச்சிழக்க செய்தான் ஆதித்யா.

"இல்ல கமலி. நீ எந்த தப்பும் செய்யல. கொஞ்ச நாளா என்னை பாடா படுத்திக்கிட்டு இருந்த பிரச்சனையை நீ தீத்து வச்சிருக்க"

அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்று ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை கமலியால். அவளை விட்டு எழுந்து நின்றான் ஆதித்யா.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now